ADVERTISEMENT

பழங்குடியினர் நல வாரியம் திருத்தி அமைப்பு

03:38 PM Sep 11, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியின மக்கள் சமூக பொருளாதார, கல்வி நிலைகளில் திட்டமிடப்பட்ட உறுதியான முன்னேற்றத்தை அடைவதற்கென தனியாக தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரியம் அமைத்து கடந்த 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி (20.04.2007) ஆணை வெளியிடப்பட்டது.

தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரை தலைவராகக் கொண்டும் 8 அலுவல் சார்ந்த உறுப்பினர்கள், 2 பழங்குடியின சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளடக்கிய 14 அலுவல் சாரா உறுப்பினர்கள் மற்றும் 3 பழங்குடியினரல்லாத அலுவல் சாரா உறுப்பினர்களைக் கொண்டு தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரியத்தை திருத்தி அமைத்து கடந்த 8 ஆம் தேதி (08.09.2023) ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

பழங்குடியினர் நல நலவாரியத்தில் பழங்குடியின மக்களை உறுப்பினர்களாக சேர்த்து அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், உதவித் தொகை வழங்குவதற்கும், பணிகள் மேற்கொள்ளப்படும் என ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT