/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ips_40.jpg)
ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்தும், பணியிட மாற்றம் செய்தும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தமிழக உள்துறை செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள உத்தரவில், “பொள்ளாச்சி ஏ.எஸ்.பி. எஸ்.பிருந்தா, பதவி உயர்வுடன் சேலம் நகர கூடுதல் ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சத்தியமங்கலம் ஏ.எஸ்.பி. ஜமன் ஜமால் பதவி உயர்வுடன் ஆவடி சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ரயில்வே எஸ்.பி.யாக சுகுணாசிங் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு சிறப்பு பட்டாலியன் மதுரை கமாண்டண்ட்டாக பாஸ்கரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தாம்பரம் சட்ட ஒழுங்கு துணை ஆணையராக கவுதம் கோபால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்”என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் மூலம் 2 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வுடன் கூடிய பணியிட மாற்றமும், 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றமும் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)