/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ips_27.jpg)
4 ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள உத்தரவில், தொழில் துறை ஆணையர் அர்ச்சனா பட்நாயக் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநர் நிர்மல் ராஜ் தொழில் துறை ஆணையர் மற்றும் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோன்று குடிமைப் பொருட்கள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் பூஜா குல்கர்னி புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் (பயிற்சி) துறையின் முதன்மைச் செயலாளர் ஹர்சகாய் மீனா நுகர்பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)