ADVERTISEMENT

அமைச்சர் காரில் விழுந்த அரச மரம்.. மரத்தை அகற்ற தயாராகும் ஒரு கும்பல்

10:53 PM Mar 06, 2019 | bagathsingh

ADVERTISEMENT

புதுக்கோட்டை நகரில் பல மாவட்ட கர்ப்பிணிகளுக்கு உதவியாக இருந்தது ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனை. புதுக்கோட்டை மன்னரால் உருவாக்கப்பட்ட மருத்துவமனை. கடந்த ஆண்டு மருத்துவக்கல்லூரி உருவாக்கப்பட்ட நிலையில் வரலாற்று சிறப்புமிக்க ராணியார் மகப்பேறு மருத்துமனை மூடப்பட்டது.

ADVERTISEMENT

மூடப்பட்ட மருத்துவமனைகளை திறக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் கோரிக்கை வைத்து போராடினார்கள்.

இந்தநிலையில் இன்று மாலை ராணியார் மகப்பேரு மருத்துமனையை மீண்டும் புதிய கல்வெட்டோடு அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். இந்த விழாவி்ல் பங்கேற்க வந்த அமைச்சர் வந்த அரசு கார் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அரச மரத்தடியில் நிறுத்தி இருந்தனர். விழா நடந்து கொண்டிருந்த நேரத்தில் நல்ல நிலையில் நின்ற அரச மரத்தின் கிளை ஒன்று உடைந்து அமைச்சர் வந்த காரின் மேல் விழுந்து கார் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து அப்பகுதியில் நின்றவர்கள் கூறும் போது..

ராணியார் மருத்துவமனை வரலாற்று சிறப்பு மிக்க மருத்துமனை. அதை மூடியதால் பலரும் அவதிப்பட்டனர். இந்த நிலையில் கஜா புயலில் பல மரங்கள் கிளை ஒடிந்தது. ஆனால் அதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சிலர் நல்ல நிலையில் நின்ற மரங்களையும் வெட்டி கடத்தினார்கள். இதை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்ளாத நிலையில் சமூக ஆர்வலர்கள் கதறியதால் இந்த அரசமரம் தப்பியது. ஆனால் இன்று அமைச்சரின் காரில் அரச மர கிளை விழுந்து கார் கண்ணாடி உடைந்ததால் அந்த இடத்தில் நின்ற முன்பு மரங்களை வெட்டி கடத்திய விஜய் மன்றத்தைச் சேர்ந்த பிரமுகர்.. இந்த மரத்தை நாளை இல்லாமல் செய்துவிடலாம் என்று கூட்டத்திலேயே சொன்னது சமூக ஆர்வலர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரின் காரில் கிளை விழுந்ததுக்காக மரத்தை அழிக்க நினைக்கலாமா? என்று கேள்வி எழுப்பியவர்கள்.. அரச மரம் காரில் விழுந்ததால் சகுனம் சரியில்லை என்ற பதற்றமும் அமைச்சர் தரப்பில் உள்ளது என்றனர். மரத்தை காக்க ஒரு கூட்டம் கிளம்பியுள்ளது. விடியும் வரை அந்த மரம் நிற்குமா என்பது தான் கேள்விக்குறியாக உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT