ADVERTISEMENT

ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்து மாற்றம்

08:13 PM Dec 15, 2023 | prabukumar@nak…

சென்னை ஓஎம்ஆர் சாலையில் நாளை (16.12.2023) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாகச் சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “ஓஎம்ஆர் சாலையில் சோதனை அடிப்படையில் நாளை (16.12.2023) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, சோழிங்கநல்லூரிலிருந்து டைடல் பார்க் நோக்கி வரும் வாகனங்கள் துரைப்பாக்கம் சந்திப்பில் திருப்பி விடப்படும்.

ADVERTISEMENT

மேலும் காமாட்சி மருத்துவமனை சந்திப்பிலிருந்து சோழிங்கநல்லூர் நோக்கி வரும் வாகனங்கள் பிஎஸ்ஆர் மால் அருகே இடதுபுறம் (ராஜீவ்காந்தி சாலையில்) திருப்பி விடப்பட்டு, பெருங்குடி சுங்கச் சாவடியில் புதிய யூ டர்ன் மூலம் சோழிங்கநல்லூர் மற்றும் பிற இடங்களுக்குச் செல்லும்.

ADVERTISEMENT

இதேபோல், கார்ப்பரேஷன் சாலையிலிருந்து துரைப்பாக்கம் சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் ராஜீவ்காந்தி சாலையில் இடதுபுறம் திருப்பப்பட்டு, பெருங்குடி சுங்கச் சாவடியில் புதிய ‘யூ’ திருப்பத்தில் (U Turn) சென்று துரைப்பாக்கம் சந்திப்பு மற்றும் பிற இடங்களுக்குச் செல்லும். இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT