ADVERTISEMENT

'1.4 லட்சம் பேருக்கு சிகிச்சை...' தமிழகத்தின் இன்றைய கரோனா நிலவரம்!

07:28 PM Jan 16, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் இன்று ஒருநாள் கரோனா பாதிப்பு என்பது 23,975 ஆக பதிவாகியுள்ளது. நேற்று 23,989 ஆக பாதிப்பு பதிவான நிலையில் இன்றைய ஒருநாள் பாதிப்பு குறைந்துள்ளது. இன்று கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 23,957 பேர் தமிழகத்திலும், மீதம் உள்ள 18 பேர் வெளிநாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த ஆண்டின் முதல் நாளான ஜனவரி ஒன்று கரோனா பாதிப்பு 1,489 ஆக இருந்தது. இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,40,720 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

சென்னையில் மட்டும் இன்று 8,987 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. நேற்று சென்னையில் கரோனா ஒருநாள் பாதிப்பு என்பது 8,978 என்று இருந்த நிலையில், இன்று அதிகரித்துள்ளது. இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் ஒரேநாளில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 36,989 ஆக அதிகரித்துள்ளது. இதில் அரசு மருத்துவமனையில் 11 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 11 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1,42,476 ஆக உள்ளது. இன்று ஒரே நாளில் 12,484 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 27,60,458 பேர் மொத்தமாகக் குணமடைந்துள்ளனர். கோவையில்-1,866, ஈரோடு-570, காஞ்சிபுரம்-697, கன்னியாகுமரி-678, மதுரை -559, செங்கல்பட்டு-2,701, தஞ்சை-439, திருவள்ளூர்-1,273, சேலம்-427, திருப்பூர்-619, திருச்சி-453, ராணிப்பேட்டை-275, நாமக்கல்-239 பேருக்கு கரோனா இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT