ADVERTISEMENT

தமிழக பள்ளி மாணவர்களுக்கு அடிப்படை சட்டங்கள் தேவை !

09:59 AM Mar 05, 2019 | Anonymous (not verified)

இந்திய அரசியலமைப்பு சட்டம் 26-11-1949 ஆம் ஆண்டு ஏற்கப்பட்டு 26-01-1950 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இந்த தினத்தை நாம் ஆண்டு தோறும் குடியரசு தினமாக (Republic Day) கொண்டாடி வருகிறோம். இந்த இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர் பாரத ரத்னா மேதகு சட்டமேதை அண்ணல் பீமாராவ் ராம்ஜீ அம்பேத்கர் ஆவர் . உலகில் மிகப்பெரிய அரசியலமைப்பு சட்டம் நம் இந்திய அரசியலமைப்பு சட்டமாகும். உலகில் மிகப்பெரிய "ஜனநாயக நாடு" என்ற பெருமை இந்தியாவிற்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சட்டங்களை இயற்றி சுமார் 65 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் நிலையில் அடிப்படை சட்டங்கள் பற்றிய கல்வியறிவு மாணவர்களிடம் சென்றடையவில்லை என்பது தான் உண்மை.

ADVERTISEMENT

தமிழகத்தில் உள்ள துவக்கபள்ளிகள் முதல் உயர்நிலைப்பள்ளிகள் வரை பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் தமிழக அரசு இலவசமாக தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் " இந்திய அரசியலமைப்பு அடிப்படை சட்டப்புத்தகங்களை " வழங்கினால் மாணவர்களிடம் சட்டக்கல்வி தொடர்பான கல்வியறிவு பெருகும்.இந்த அடிப்படை சட்டப்புத்தகத்தில் "அனைவருக்கும் கட்டாய கல்வி உரிமை சட்டம் -2009"( Right To Education) , தகவல் அறியும் உரிமை சட்டம் - 2005 ( Right To Information) , குழந்தை தொழிலாளர் (Child Labour) , சம வேலைக்கு சம ஊதியம் சட்டம் ( Equal Pay Low For Equal Work ) உள்ளிட்ட முக்கிய சட்டங்களை ஒவ்வொரு பருவ பாடத்திட்டத்திலும் தலா 10 அடிப்படை சட்டங்ளை கொண்ட முழு விபர புத்தங்களை ஒவ்வொரு மாணவர்களுக்கும் வழங்கினால் ஒவ்வொரு மாணவரும் தனது பள்ளி பருவ இறுதியில் சுமார் 120 சட்டங்கள் தொடர்பான கல்வியறிவை எளிதாக பெறுவர்.

ADVERTISEMENT

இதனால் தமிழகத்தில் ஊழல் , லஞ்சம் எளிமையாக கட்டுப்படுத்தலாம் ( அல்லது) முற்றிலும் ஒழிக்கவும் வாய்ப்பு உண்டு என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் மாணவர்கள் மட்டும் சட்டறிவு பெற்றால் அவர்களின் தாய் , தந்தை ,சகோதர் , சகோதரிகள் , நண்பர்கள் உட்பட ஒட்டுமொத்த சமுதாயமே சட்டம் பற்றிய கல்வி அறிவை மாணவர்கள் மூலம் கற்கலாம் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவூட்ட விரும்புகிறேன்.அடிப்படை சட்டங்களை பெறும் ஒவ்வொரு மாணவர்களாலும் ஊழல் , லஞ்சம் என்ற வார்த்தை நாளுக்கு நாள் சமுதாயத்தில் குறைய தொடங்கும். இதன் விளைவால் விரைவில் லஞ்சம் , ஊழல் இல்லாத இந்தியாவிலேயே முதன்மை மாநிலம் என்ற பெருமை தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கு போய் சேரும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. நம் மாநிலத்தை உதாரணமாக வைத்து மற்ற மாநில அரசுகளும் அவரவர் மாநில பள்ளி மாணவர்களுக்கு இந்திய அரசியலமைப்பு அடிப்படை சட்டக்கல்வியை பாடத்திட்டத்தில் சேர்க்கவும் வாய்ப்பு உண்டு. இதனால் ஒட்டுமொத்த இந்தியாவுமே லஞ்சம் , ஊழலற்ற நாடு என்பதை உலகிற்கு காட்டலாம்.

இந்திய அரசியலமைப்பு சட்டம் + மாணவர்கள் = " லஞ்சம் மற்றும் ஊழல் வேரோடு ஓழிந்திடும்"

ஊழல் மற்றும் லஞ்சத்திற்கு எதிரானவர்களாக மாணவர்கள் மாறினால் மக்களின் வாழ்க்கை தரம் உயரும். சமுதாயம் வளம் பெரும் , ஏழ்மை வீழும் . அனைத்து தரப்பு மக்களும் சமமான வாழ்க்கை வாழலாம் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.

பி.சந்தோஷ் , சேலம்

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT