Skip to main content

இந்தியா வல்லரசு நாடாக மாறிட "லோக் ஆயுக்தா" மற்றும் "லோக் பால்" சட்டங்கள் தேவை !

Published on 08/03/2019 | Edited on 08/03/2019

1809 ஆம் ஆண்டு ஸ்வீடன் நாடு   "லோக் ஆயுக்தா" மற்றும் "லோக்பால்" சட்டத்தை முதன் முதலில் அமல்படுத்தியது. இதன் மூலம் லஞ்சம் , ஊழல் செய்த அதிகாரிகள் அந்நாட்டின் இந்த அமைப்பால்  தண்டிக்கப்பட்டனர். இதனை பல நாடுகளும் பின்பற்றி ஊழலுக்கு எதிரான இந்த சட்டத்தை இயற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

"லோக் ஆயுக்தா" அமைப்பு :
மாநில அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள்,முதல்வர் உள்ளிட்டோர் மீது ஏதேனும் லஞ்சம் மற்றும் ஊழல் பொதுமக்கள் புகார் அளித்தால் பாரபட்சம் இல்லாமல் அவர்களை விசாரிக்கும் அதிகார அமைப்பு தான் "லோக் ஆயுக்தா". இது மாநிலத்தின் ஊழலுக்கு எதிரான அமைப்பு ஆகும்.

"லோக் ஆயுக்தா "அமைப்பின் தலைவர் இருக்க என்ன தகுதி வேண்டும் ?
பதவியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி (அல்லது) ஓய்வு உயர்நீதிமன்ற நீதிபதி "லோக் ஆயுக்தா" அமைப்பின் தலைவராக இருக்க தகுதி உடையவர் ஆவர்.

lokpal

இந்தியாவில் 1996 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய் தலைமையிலான அரசு "ADMINISTRATIVE REFORMS COMMISSION " என்ற அமைப்பை உருவாக்கி அரசின் கீழ் உள்ள அதிகாரிகளை மாற்ற இக்குழு அமைக்கப்பட்டு நிர்வாக சீர்திருத்தம் மேற்கொண்டது. அப்போது தான் ஊழல் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டங்கள் இயற்ற வேண்டும் என அறிக்கையை தாக்கல் செய்தது . மேலும் இக்குழுவில் மக்கள் கண்காணிப்பாளர்கள் எனவும் விசாரணை குழுவில் ஒரு அதிகாரி நியமிக்கப்படுவார் என அறிவித்தது. ஆனால் அதன் பிறகு மத்தியில் அமர்ந்தவர்கள் இக்குழுவின் அறிக்கையை கிடப்பில் போட்டனர். 

இந்தியாவில் 2011 ஆம் ஆண்டு டெல்லி ராம்லீலா மைதானத்தில் மத்தியில் லோக்பால் சட்டம் மற்றும் மாநிலத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டார் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மற்றும் கிரண் பேடி,தற்போதைய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இவர்களின் மூலம் தான் லோக் ஆயுக்தா சட்டம் மற்றும் லோக்பால் சட்டம் ஒன்று உள்ளது என்று மக்களுக்கு தெரியவந்தது. இந்தியாவில் மொத்தம் உள்ள 29 மாநிலங்களில் 17 மாநிலங்களில் "லோக் ஆயுக்தா" அமைப்பு நடைமுறையில் உள்ளது. இந்தியாவிலேயே முதன் முதலாக "லோக் ஆயுக்தா " சட்டம் கொண்டு வந்த மாநிலம் "மகாராஷ்டிரா" ஆகும். இதனை தொடர்ந்து உத்தரபிரதேசம் போன்ற பல மாநிலங்களில் தற்போது வரை லோக் ஆயுக்தா நடைமுறையில் உள்ளது.

தமிழ்நாடு , மேகாலயா , மிசோரம் , டெல்லி , தெலங்கானா , ஜம்மு & காஷ்மீர் , பாண்டிச்சேரி , திரிபுரா , மேற்கு வங்காளம் , அருணாச்சல பிரசேதம் , நாகலாந்து , மணிப்பூர் உள்ளிட்ட 12 மாநிலங்கள் " லோக் ஆயுக்தா " அமைப்பை உருவாக்கவில்லை. 
எனவே லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்காதா மாநில அரசுகள் உடனடியாக " லோக் ஆயுக்தா " அமைப்பை உருவாக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அவர்கள் சமீபத்தில் உத்தரவிட்டதது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து பல மாநிலங்கள்  "லோக் ஆயுக்தா" சட்டம் இயற்ற தேவையான நடவடிக்களை எடுத்து வருகின்றனர்.

lokayuktha


தமிழகத்தில் "லோக் ஆயுக்தா" சட்டம் கொண்டு வரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளனர். இதனால் 2018 ஆம் ஆண்டு தமிழக  சட்டபேரவையில் " லோக் ஆயுக்தா" சட்டம் நிறைவேற்றப்பட்டது . இருப்பினும் இந்த அமைப்பு முழு வடிவம் இதுவரை பெறவில்லை. மேலும் இந்த அமைப்பில் போலி புகார் அளிக்கும் மனுதாரருக்கு அதிகபட்ச தண்டனையாக ரூபாய் 1 லட்சம் மற்றும் ஒரு ஆண்டு சிறைத்தண்டனை அளிக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா சட்டம் தமிழக சட்டப்பேரவையில் இயற்றப்பட்டது. மேலும் போலி புகாரால் பாதிக்கப்பட்ட அதிகாரிக்கு நஷ்ட ஈடு வழங்கவும் இந்த சட்டம் வழிவகை செய்கிறது.இன்றைய  காலகட்டத்தில் இந்திய நாட்டிற்கு இது போன்ற சட்டங்கள் மக்களுக்கு அவசியம் ஆகும்.  

" லோக் ஆயுக்தா " சட்டம் மற்றும் குழுவை பல மாநில அரசுகள் அமைத்த போதும் மத்தியில் " லோக் பால் " சட்டத்தை இதுவரை மத்திய அரசு உருவாக்கவில்லை.  மத்தியில் " "லோக்பால் சட்டம்" கொண்டு வர கூடி கடந்த மாதம் மகாராஷ்டிரா மாநிலத்தில் சமூக சேவகர் அண்ணா ஹசாரே மீண்டும் உண்ணாவிரதம் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அவர் கூறியது 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் பாஜக தாங்கள் ஆட்சி அமைந்த உடனடியாக " லோக்பால் " அமைப்பு உருவாக்கப்படும் என என்னிடம் கூறினார்கள். ஆனால் ஐந்து ஆண்டுகள் முடியும் நிலையில் இதற்கான எந்த நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கவில்லை என அண்ணா ஹசாரே கூறியுள்ளார். இந்திய மக்களுக்கு இச்சட்டம் மிகுந்த பாதுகாப்பாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்தது ஆகும். லோக் ஆயுக்தா சட்டம் + லோக் பால் சட்டம்  = " ஊழலை ஒழித்திடும் " மற்றும் " இந்தியா ஜொலித்திடும்"

 

பி . சந்தோஷ் , சேலம் 

சார்ந்த செய்திகள்

Next Story

'இதெல்லாம் இல்லாததால் தான் நான் அரசியலுக்கு வருகிறேன்'-விஷால் பேட்டி

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'It is because of the lack of all this that I am coming to politics' - Vishal interview

நடிகர் விஷால் திரைப்படங்களில் நடித்துக் கொண்டே, அறக்கட்டளையின் மூலம் மக்களுக்குப் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். கடந்த 2017 ஆம் அண்டு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக சுயேட்சை வேட்பாளராக மனுத் தாக்கல் செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரது மனு நிராகரிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் புது அரசியல் கட்சி விஷால் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாகக் கூறப்பட்டது. ஆனால் அதனை திட்டவட்டமாக மறுத்த விஷால், வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால், அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன் என்று பேசியிருந்தார்.

இந்தநிலையில் நடிகர் விஷால் புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விஷால், 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன் புதிய கட்சியைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு வேட்பாளர் பட்டியலில் என் பெயரும் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் விஷால் பேசுகையில், ''அரசியலுக்கு வருகிறேன் என்று நான் ஏன் ஓப்பனாக சொல்கிறேன் என்றால் நான் எதையுமே மூடி மறைத்தது கிடையாது. எதற்கு விஷால் அரசியலுக்கு வரவேண்டும். நிறைய பேர் இருக்காங்களே. இவர் வந்து என்ன செய்யப் போகிறார் என்று கேட்பார்கள்.

மக்களுக்கு எந்த ஒரு குறையும் இல்லை. விவசாயிகளுக்கு எந்த குறையும் இல்லை. கிராமத்தில் குடிநீர் பிரச்சனை  இல்லை. ரோடு நல்லா போட்டிருக்கிறார்கள், தூர்வாரி இருக்கிறார்கள், மெட்ரோ இருப்பதால் டிராபிக் நெரிசல் இல்லாமல் நல்லாவே இருக்கிறது, சாலை எல்லாமே கரெக்டா இருக்கும்போது இவன் அரசியல் எதுக்கு தேவையில்லாமல் வரான் என்று கேள்வி எழுப்புவார்கள். ஆனால் இதெல்லாம் இல்லாததால் தான் நான் அரசியலுக்கு வருகிறேன். அதுதான் உண்மை. அதுதான் என்னுடைய பதில். நல்லவேளை விஜயகாந்த் சார் மாதிரி என்கிட்ட கல்யாண மண்டபம் இல்லை. இல்லைன்னா இதை நான் சொன்னதனால் இடிச்சு தள்ளியிருப்பாங்க. டைம் வரும்போது சொல்கிறேன்'' என்றார்.

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; இந்தியா வெளியிட்ட அறிக்கை!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
India is of the opinion that peace should return to the Israel-Iran issue

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல், ஈரான் மோதல் விவகாரத்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களுடன் தூதரகங்கள் நெருங்கிய தொடர்பில் உள்ளன. இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் ஏற்பட்டது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. உடனடியாக மோதலை நிறுத்தி, வன்முறையை கைவிட்டு அமைதிக்குத் திரும்ப வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.