ADVERTISEMENT

திருவாரூர் லாரி ஓட்டுனர்கள், உரிமையாளர்கள் திரண்டுவந்து ஆட்சியரிடம் மனு

09:52 AM May 07, 2019 | kalaimohan

திருவாரூர் மாவட்டத்தில் தனியார் அரிசி ஆலைகளுக்கு சொந்தமான லாரிகளில் மட்டுமே நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என மிரட்டி வரும் தனியார் முகவர்களை கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் 300க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.

ADVERTISEMENT

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருவாரூர் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் திறந்தவெளி சேமிப்பு கிடங்கு மற்றும் ரயில் நிலையத்தில் இருந்து நெல் அரவைகாக நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக தனியார் நவீன அரிசி ஆலைகளுக்கு கொண்டு செல்வது வழக்கம்.

ADVERTISEMENT

இந்நிலையில் தற்போது தனியார் அரிசி ஆலைகளுக்கு சொந்தமான லாரிகளில் மட்டுமே நெல் மூட்டைகளை எடுத்து செல்ல வேண்டுமென நிர்ப்பந்தம் செய்து வருகின்றனர். இதனால் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மூவாயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளாவார்கள், எனவே மாவட்ட ஆட்சியர் உடனடியாக இந்த கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து 300 க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து மனு அளித்தனர்.

இதனால் மாவட்ட ஆட்சியரகத்தில் ஒரு பரபரப்பு சூழ்நிலை ஏற்பட்டது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT