திருவாரூர் அருகே நன்னிலத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 11 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. லாரியை விட்டுவிட்டு தப்பியோடிய ஓட்டுநர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Advertisment

11 trucks carrying sand

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே நன்னிலம் கும்பகோணம் சாலையின் வழியாக மணல் கடத்தல் நடைபெறுவதாக வந்த ரகசிய தகவலின் பேரில் நேற்றுகாலை நன்னிலம் காவல்த்துறையினர் அச்சுதமங்கலம் என்ற இடத்தில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியின் வழியாக வந்த 11லாரிகளை நிறுத்தி சோதனையிட முயன்றபோது காவல்துறையினரை கண்டதும் லாரிகளை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு ஓட்டுநர்கள் தப்பியோடிவிட்டனர். பின்னர் நடைபெற்ற சோதனையில் லாரிகளில் மணல் இருப்பது தெரியவந்தது.

இந்த மணல் தஞ்சாவூர் பகுதியிலிருந்து கடத்தி வரப்பட்டது என தெரியவந்ததையடுத்து லாரிகளை பறிமுதல் செய்து நன்னிலம் காவல்துறையினர் லாரிகளின் உரிமையாளர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும் தப்பியோடிய ஓட்டுநர்களையும் தேடி வருகின்றனர்.

Advertisment

இதுகுறித்து காவல்துறையினரிடம் கேட்டபோது, "ஆறுகள், குளங்களில் தண்ணீர் இருப்பதால் விளைநிலங்களில் தோண்டி மணல்கடத்தல் கும்பல் மணலைக்கடத்துகிறது. இந்த மணலை நாச்சியார்கோயில் அருகே உள்ள அய்யாவாடியில் இருந்து எந்தவித அனுமதியும் இல்லாமல் கடத்திவந்துள்ளனர்." என்கிறார்.