ADVERTISEMENT

முதியவருக்கு 45 ஆண்டுகளாக அடைக்கலம் கொடுத்து நெகிழ வைத்த கிராம மக்கள்!

10:51 AM Apr 18, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து தனக்கென யாரும் இல்லாத நிலையில் வாலிபர் ஒருவர் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள மாம்பட்டு கிராமத்திற்கு தனக்கான ஆதரவைத் தேடி வந்துள்ளார். இவ்வாறு வந்த அந்த வாலிபருக்கு மாம்பட்டு கிராம மக்கள் அவரை மனிதாபிமானத்தோடு ஏற்றுக்கொண்டு அன்பும் ஆதரவும் கொடுத்து வந்ததுடன் சபரிமுத்து எனப் பெயரிட்டு தினந்தோறும் அவருக்கு உணவு வழங்கி வந்துள்ளனர்.

இதனால் மாம்பட்டு கிராம மக்களோடு சேர்ந்து வசித்து வந்த சபரிமுத்து வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். அதனைத் தொடர்ந்து அவரை, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்த கிராம மக்கள் அவருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில், சபரிமுத்து உடல்நிலை மிகவும் பாதிப்படைந்து கடந்த 14 ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களும் பொதுமக்களும் சேர்ந்து இறுதி மரியாதை செய்து சபரிமுத்துவின் உடலை நல்லடக்கம் செய்தனர். ஆதரவற்ற நிலையில் வந்த சபரிமுத்து உடலை 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்த நிகழ்வு மக்கள் மத்தியில் தற்போது சோகத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT