திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தொகுதியின் முன்னாள் அதிமுக செயலாளரும் தற்போதைய அதிமுக ஜெ. பேரவை செயலாளருமான பாஸ்கர் ரெட்டியார் என்பவரின் இல்லத்தில் இன்று பிப்ரவரி 4ஆம் தேதி மாலை திருவண்ணாமலை, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வருமானவரித்துறை அதிகாரிகள் 10 பேர் கொண்ட குழு அவரது வீட்டுக்குள் நுழைந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
தமிழ்நாடு அரசின் ஒப்பந்ததாரராக பதிவு செய்து பல பணிகளை எடுத்து செய்து வருகிறார். இவர் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்த அதிமுக முன்னால் அமைச்சர் முக்கூர் சுப்ரமணியன் ஆதரவாளர் ஆவார். பாஸ்கரை அவரது பினாமி என கட்சி வட்டாரத்தில் அழைப்பார்கள். ஆளும்கட்சியை சேர்ந்தவரின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்துவது அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.