ADVERTISEMENT

தீபத்திருவிழா பந்தக்கால் முகூர்த்தம் நிகழ்ச்சி... புறக்கணித்த அமைச்சர்.

07:41 PM Sep 30, 2019 | santhoshb@nakk…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபம் திருவிழா உலக புகழ்பெற்றது. இந்த விழா 10 நாட்கள் நடைபெறும். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான தீபத்திருவிழா டிசம்பர் 1- ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, டிசம்பர் 10- ஆம் தேதி காலை கோயில் வளாகத்தில் பரணி தீபமும், மாலை 06.00 மணிக்கு மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படும்.

ADVERTISEMENT


தீபத்தினத்தன்று ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே கோயிலுக்குள் இருந்து வெளியே வரும் அர்த்தநாதீஸ்வரரை காண கோயில் வளாகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்களும், மகாதீபத்தன்று 10 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கிரிவலமும் வருவார்கள்.

ADVERTISEMENT


இந்த தீபத்திருவிழாவை தொடங்குவதற்கான பந்தக்கால் முகூர்த்தம் நிகழ்ச்சி செப்டம்பர் 30- ஆம் தேதி காலை 06.00 மணிக்கு அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் முன்பு பந்தக்கால் நடப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி முன்னிலையில் நடந்த விழாவில் நகரத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் கோயில் நிர்வாகிகளும் கலந்துக்கொண்டனர். பந்தக்கால் நடப்பட்ட பின்பே தீபத்திருவிழாவின் பணிகள் தொடங்கி, தேர்கள் சீரமைப்பு, கோயில்கள் சீரமைப்பு போன்ற பணிகள் தொடங்கும்.


திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டுமல்ல, தென்னிந்தியாவின் முக்கிய திருவிழா திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாவட்டத்தை சேர்ந்த சேவூர்.ராமச்சந்திரன் தான் தமிழக அறநிலையத்துறை அமைச்சராகவுள்ளார். இந்த விழாவில் அவர் கலந்துக்கொள்வதாக இருந்தது. ஆனால் வரவில்லை. சொந்த மாவட்டத்தில் நடைபெறும் முக்கிய திருவிழாவின் பந்தக்கால் முகூர்த்த விழாவிலேயே கலந்துக்கொள்ளவில்லை என்பது அண்ணாமலையார் பக்தர்களை அதிருப்தியடைய வைத்துள்ளது. பிரதமர் மோடி தமிழகம் வருகை வந்ததால், அவரை வரவேற்க சென்னை சென்றுவிட்டதாக தகவல்கள் கூறுகின்றனர்.





Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT