ADVERTISEMENT

தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும் நேரம்-தமிழக அரசு அறிவிப்பு!!

09:26 AM Nov 02, 2018 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும் நேரம் காலை 6-7 இரவு 7-8-தமிழக அரசு என அறிவித்துள்ளது.

அண்மையில் தீபாவளிக்கு நாடு முழுவதும் இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்பை அடுத்து தமிழக அரசு சார்பில் கூடுதல் நேரம் வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்து. ஆனால் பாட்டாசு வெடிப்பதற்கு இரண்டு மணிநேரம் மட்டுமே அனுமதிக்கப்படும் அந்த இரண்டு மணிநேரம் காலையா? மாலையா? என்பதை தமிழக அரசே முடிவெடுத்து கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.

அதனை அடுத்து தீபாவளியன்று தமிழகத்தில் காலை ஒரு மணிநேரம் மாலை ஒரு மணி நேரம் என பிரித்து மொத்தம் 2 மணிநேரம் பட்டாசு வெடிக்கலாம் எனக்கூறி நேரத்தையும் நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது. அதாவது காலை 4 மணிமுதல் 5 மணி வரையும் இரவு 9 முதல் 10 மணிவரையும் பட்டாசு வெடிக்க பரிந்துரை செய்திருந்தது உச்சநீதிமன்றம்.

இந்நிலையில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும் நேரம் காலை 6-7 இரவு 7-8-தமிழக அரசு என அறிவித்துள்ளது. மேலும் சத்தம் குறைவாக உள்ள வெடிகள் வெடிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT