cracker busting time

தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் எஸ்.பி தெரிவித்துள்ளார்.

Advertisment

அண்மையில் தீபாவளிக்கு 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. தமிழக அரசுபட்டாசு வெடிக்கும் நேரத்தை கூட்டஅந்த வழக்கில் மேல்முறையீடு செய்தது. ஆனாலும் இரண்டு மணிநேரம்தான் அனுமதி ஆனால் பட்டாசு வெடிக்கும் நேரம் காலையா? மாலையா? என்பதை தமிழக அரசே முடிவெடுத்துக்கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் கூறியதை அடுத்து காலை 6 முதல் 7 மற்றும் இரவு 7 முதல் 8 மணிவரை பட்டாசு வெடிக்கலாம் என தமிழக அரசு கூறியிருந்தது.

Advertisment

இந்நிலையில் நாமக்கல் மாவட்ட எஸ்.பி நீதிமன்ற தீர்ப்பையும் தமிழக அரசின் ஆணையையும் மீறி பட்டாசு வெடித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.