ADVERTISEMENT

காவல் நிலையத்தைக் கலாய்த்த டிக்டாக்! -ஆக்ஷனுக்கு எதிராக ஆக்ஷன்!

11:16 PM Jan 12, 2019 | cnramki

சிவகாசி கிழக்கு காவல் நிலையைத்தில் அடுத்தடுத்து பதிவு செய்த இரண்டு வழக்குகளும் ‘போதை’ சம்பந்தப்பட்டவை. கைது செய்யப்பட்டவர்கள் இளைஞர்களாக உள்ளனர்.

ADVERTISEMENT

அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட ரூ.6.5 லட்சம் மதிப்பிலான பான்மசாலா மற்றும் புகையிலைப் பொருட்கள் சிவகாசி பாறைப்பட்டி சோதனைச்சாவடியில் சிவகாசி பாறைப்பட்டி சோதனைச் சாவடியில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அந்த வேனில் வந்த மூன்று இளைஞர்களிடமிருந்து ரூ.1 லட்சத்து 98 ஆயிரமும் கைப்பற்றப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ADVERTISEMENT

தமிழகத்தில் பான்மசாலா போன்ற புகையிலைப் பொருட்கள் விற்பனையெல்லாம் ஜுஜுபி தான்! இதைக் காட்டிலும் பெரிய விவகாரமாக இருக்கிறது, இளைஞர்கள் நால்வர் கைது செய்யப்பட்ட வழக்கு. அது என்னவென்று பார்ப்போம்!

‘வந்த இடத்துல வாயை வச்சிட்டு சும்மா இருக்காம.. தேவையில்லாம பேசி மாட்டிக்கிட்டானுவ..’ என்று சிவகாசி போலீசார்கள் சிரித்தபடி சொன்ன விவகாரம் இது –

சிவகாசி துலுக்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் நால்வர், பசுபதி பாண்டியன் நினைவு தினத்தை முன்னிட்டு, வாகனத்தில் செல்வதற்கு அனுமதி கேட்டு சிவகாசி கிழக்கு காவல் நிலையம் வந்தனர். காவல் நிலையங்களின் மீது அவர்களுக்கு அப்படி என்ன கோபமோ? வந்த வேலையைக் காட்டிலும், பெரிய காரியம் ஒன்றை அரங்கேற்றினர்.

சிறுத்தை என்ற திரைப்படத்தில் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடிகர் கார்த்தி, கொடூர வில்லன் ஒருவனுடைய வீட்டு வாசல்படியில் கால் வைக்க முற்படும்போது, “ராக்கெட்.. வாஸ்து பார்த்து வலது கால் எடுத்து வச்சு போறதுக்கு இது என்ன மாமியார் வீடா? எச்சக்கல.. கேப்மாரி.. மொள்ளமாரி.. முடிச்சவிக்கி வீடு இது.. இதுக்கெல்லாம் போடு லெஃப்ட் லெக்..” என்று வசனம் பேசி, இடது காலை ஸ்ட்ராங் ஆக எடுத்து வைப்பார்.

இந்த இளைஞர்களுக்கு, காவல் நிலையத்தைப் பலரும் மாமியார் வீட்டுக்கு ஒப்பிடுவது நினைவுக்கு வந்து தொலைத்திருக்கிறது. அதனால், டிக்டாக் செயலியில் உள்ள சிறுத்தை வசனத்துக்கேற்ப, சிவகாசி காவல் நிலைய வாசலில் ‘ஆக்ஷன்’ காட்டியதோடு, சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டனர். காவல் நிலையம் என்பது மொள்ளமாரி.. கேப்மாரி.. முடிச்சவிக்கிகளின் வீடா? வந்ததே கோபம் போலீசார்களுக்கு. ஈஸ்வரன், சங்கரேஸ்வரன், முருகேசன், குருமதன் ஆகிய நான்கு இளைஞர்களின் மீது, 294(b), 504, 505, ITACT4 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இன்றைய இளைஞர்களின் டிக்டாக் மோகமானது, ‘ஆட்டைக் கடிச்சு.. மாட்டைக் கடிச்சு.. கடைசில மனுஷனைக் கடிச்ச கதையா..’ காவல் நிலையத்தைக் கிண்டல் பண்ணும் அளவுக்குத் துணிச்சலைத் தந்தது கொடுமைதான்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT