ADVERTISEMENT

உள்ளாட்சித் தேர்தல் வரும் நேரத்தில் எங்கள் மீது பழி சுமத்தவே இந்த ஏற்பாடு- மதுரையில் திருமா பேட்டி 

05:27 PM Nov 22, 2019 | kalaimohan

மதுரை விமானநிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

இலங்கை தேர்தலில் புதிய அதிபராக கோத்தபய ராஜபக்சே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். தற்போது மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவி ஏற்றிருக்கிறார். 2009-ல் லட்சக்கணக்கான தமிழ் மக்களை கொன்று குவித்து இனப்படுகொலை செய்த ராஜபக்சே குடும்பம் இப்போது ஆட்சியதிகாரத்தில் அமர்ந்திருப்பது தமிழ்ச் சமூகத்திற்கு பெரும் அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

கோத்தபய ராஜபக்சே பதவியேற்ற உடனே ராமேஸ்வரம் பகுதியில் இருந்து கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க சென்ற ஏறத்தாழ 3000 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுட்டுள்ளனர் இது வருந்தமளிக்கிறது. இது பிடிக்காமல் இருக்கலாம். ராஜபக்ச குடும்ப ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால் ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் இதேநிலை என்பதற்கு இது ஒரு சான்று.

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழர் விரோதிகளான ராஜபக்ஷவின் குடும்பத்தை கடந்த பத்தாண்டுகளில் முறையாக விசாரணை நடத்தி இருந்தால் குற்றவாளிக்கூண்டில் இருந்திருப்பார்கள்.
அவர்கள் தேர்தலில் போட்டியிட்டு இருக்க முடியாது சர்வதேச சமூகம் ஜ.நா.பேரவை உள்ளிட்ட சர்வதேச சமூகமும் இந்த இனப்படுகொலையை விசாரித்து இருந்தால் அவர்கள் போர் குற்றவாரியாக இருந்திருப்பார்கள். சர்வதேச சமூகம் அலட்சியம் காட்டியதன் விளைவாக இன்றைக்கு இந்த அவலம் ஏற்பட்டிருக்கிறது.

இதனிடையில் ராஜபக்சே குடும்பத்தைச் சார்ந்தவர்களே வரவேற்று சிறப்பு செய்ய இந்திய அரசு காத்திருக்கிறது. வருகிற 21-ஆம் தேதி ராஜபக்சே இந்தியா வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது .இதனை கண்டிக்கும் வகையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நாளை சென்னையில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

ராஜபக்சேவின் இந்திய வருகையை எதிர்த்து வரவேற்பை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. நாமல் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். மகிந்த ராஜபக்சேவின் மகன் யாரோ எழுதிக் கொடுத்த அறிக்கையில் கையெழுத்திடுகிறார்.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பதும் களப்பணி ஆற்றுவதற்கு நாங்கள் கடமை பட்டுள்ளோம்.

சுயநலமும் சந்தர்ப்பவாதமும் இல்லை வேண்டுமென்றே திட்டமிட்டு முயற்சியில் ராஜபக்ச குடும்பம் ஈபட்டு உள்ளது. தமிழ் நாட்டு தலைவர்களின் அவர்களுக்கு ஏதோ ஈழத்தமிழர்கள் மீது, தமிழ்ச் சமூகத்தின் மீது புதிதாக கரிசனம் இருப்பது வியப்பை அளிக்கிறது.

தமிழ்நாட்டுத் தலைவர்களுக்கு அறிவுரை சொல்வதை கைவிட்டு எஞ்சியிருக்கும் தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும், மறுவாழ்வு வழங்கவும் ராஜபக்சே குடும்பம் முன்வர வேண்டும். அங்கே நிலைகொண்டு இருக்கிற ராணுவத்தை திரும்பப்பெற வேண்டும் சிங்கள மயமாக்கம் செய்வதை கைவிட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்

நடைபெற உள்ளாட்சித் தேர்தல் வரும் நேரத்தில். எங்கள் மீது பழி சுமத்து கிறார்கள். எங்களுக்கு எதிராக இந்த காய்களை நகர்த்துகிறார்கள். திமுக கூட்டணிக்கு ஒரு சலசலப்பை ஏற்படுத்த வேண்டும் இடைவெளியை ஏற்படுத்த வேண்டும் என்பது விதி ஆர்எஸ்எஸ் உள்ளிட்டவர்களிடம் ஏற்கனவே பலமுறை விளக்கம் சொல்லிவிட்டேன். மதசார்பற்ற கருத்துக்கு ஒட்டு மொத்த இந்து சமுகத்தினருக்கு விடுதலைச் சிறுத்தைகள் திருமாவளவன் எதிராக இல்லை.

சனநாதத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இடையில் நடைபெறுகிற ஒரு கோட்பாட்டு விதம் இது கௌதம புத்தர் காலத்தில் இருந்து நடைபெற்று வருகிறது. கௌதம புத்தர் சனாதனத்தை எதிர்த்தார், அய்யன் திருவள்ளுவர் சனாதனத்தை எதிர்த்தார். புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் எதிர்த்தார் அந்த வரிசையில் விடுதலைச் சிறுத்தைகளும் என்கிற மதவாதம் எனும் கோட்பாட்டை எதிர்த்து ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக குரல் கொடுக்கிறோம்.
நாங்கள் மதவாதத்திற்கு எதிரானவர்கள் அல்ல.

சோனியா காந்தி அம்மையாருக்கு வழங்கப்பட்டிருந்த தீவிரமான பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது. இந்திராகாந்தி அம்மையார் கொல்லப்பட்டார், ராஜிவ் காந்தி கொல்லப்பட்டnர். அந்த குடும்பம் அரசியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ஆட்சி அதிகாரத்தில் இருக்க நரேந்திர மோடி பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். அதற்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு திரும்பப் பெற்றது அரசியல் வெளிப்படுத்துகிறது. பெருமையை வெளிப்படுத்தவில்லை என்பதை சுட்டிக்காட்டும் வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கருத்துக்களையும் பதிவு செய்திருக்கிறார்கள்.

கமல்ஹாசனும் ரஜினிகாந்த்தும் இணைவது என்பது நாட்டு மக்களுடைய பிரச்சினைகள் அல்ல. அது அவர்களுடைய தனிப்பட்ட பிரச்சினைஎன்றார்.

ரஜினி நாளை அதிசயம் நடக்கும் என்றுகூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, ரஜினி இமய மலை சென்று வந்திருப்பதால் யாராவது அவரிடம் கூறியதைதான் அவர் கூறியிருபார் என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT