கமல் 60’ எனும் பிரம்மாண்டமான விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார்.

 Kamal's key announcement with Rajini

Advertisment

Advertisment

நிகழ்ச்சியில் கமலஹாசனுடன் நடித்த நடிகர், நடிகைகள், பிரபலங்கள், உடன் பணியாற்றியவர்கள் வருகை தந்திருந்தனர். நடிகர் ரஜினிகாந்தும் வந்துள்ளார்.நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத்ஒரு முக்கியமான அறிவிப்பை கமல்ஹாசன்அறிவிக்க இருக்கிறார் அதை தெரிவிப்பதற்கு நடிகர் ரஜினிகாந்தும் மேடைக்கு வரவேண்டும் என அழைத்தார்.

நடிகர் ரஜினிகாந்த் மேடைக்கு வந்ததும் கமலஹாசன் 'கமல் 60' எனும் இந்த நிகழ்ச்சியில் கிடைக்கும் வருமானத்தில் செலவு போக ரூபாய் 1 கோடியை தனது சொந்த ஊரான பரமக்குடியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள திறன் வளர் பயிற்சி மையத்திற்கு நன்கொடையாக வழங்குவதாகவும், இசையமைப்பாளர் இளையராஜாவும், ரஜினியும் அதற்கான காசோலையை திறன் வளர் பயிற்சி மையத்திற்கு வழங்கி சிறப்பிக்கவேண்டும் எனவும் தெரிவித்துக் கொண்டார்.