ADVERTISEMENT

டாஸ்மாக் கடை அமைக்காதே- பள்ளி மாணவிகள் தாசில்தாரிடம் மனு!

05:12 PM Sep 03, 2019 | santhoshb@nakk…

திருவண்ணாமலை மாவட்டம். செங்கம் அடுத்து குப்பத்தம் கிராமம் உள்ளது. இந்த பகுதியில் குப்பநத்தம் அணைக்கட்டு உள்ளது. இங்கு பகுதியில் தினமும் நூற்றுக்கணக்கான குடிமகன்கள் மது அருந்தி விட்டு செல்கின்றனர். அவர்கள் குடிப்பதற்கான மதுபானங்களை செங்கத்திலேயே வாங்கி செல்கின்றனர். இதனை அறிந்த டாஸ்மாக் நிர்வாகமும், அதன் ஊழியர்களும், அந்த சாலையில் ஒரு டாஸ்மாக் கடையை அமைப்பது என முடிவு செய்தனர்.

ADVERTISEMENT

இதற்காக செங்கத்திலிருந்து குப்பனத்தம் செல்லும் கிராம சாலையில் அரசு மதுபானக்கடை திறக்கப்படும் என கூறியதையடுத்து குப்பனத்தம் சாலையில் உள்ள ஒரு தனிநபர் இடத்தில் மதுபான கடை வைக்க பேசி முடித்து, அதற்கான எல்லா ஏற்பாடுகளும் செய்தனர். இந்த தகவலை அறிந்து, அந்த சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளி அதிர்ச்சியடைந்தது.

ADVERTISEMENT

இந்த சாலையில் மதுபான கடை வந்தால் பள்ளி மாணவ- மாணவிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் பள்ளி நிர்வாகம் செப்டம்பர் 3- ஆம் தேதி, 200- க்கும் மேற்பட்ட மாணவிகளை அழைத்து சென்று செங்கம் வட்டாட்சியரிடம் அரசு மதுபான கடையை அமைக்க வேண்டாம் என்று கூறி கோரிக்கை மனுவை அளித்தனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT