ADVERTISEMENT

பட்டப்பகலில் தி.மலையில் இளைஞர் படுகொலை– சென்னையில் நடந்த குழந்தை கொலைக்கு பழிக்குப்பழியா? - பரபரக்கும் பின்னணி தகவல்கள்

05:29 PM Dec 30, 2018 | raja@nakkheeran.in


திருவண்ணாமலை நகரம், அய்யங்குளத்தெருவில் இந்தியன் வங்கி எதிரே கிப்ட் ஷாப் மற்றும் மொபைல் ரீசார்ஜ் கடை உள்ளது. இந்த கடையில் நேற்று டிசம்பர் 29ந்தேதி மாலை 5.30 மணியளவில் கடைக்குள் இருந்தவரை இரண்டு பேர் அடித்துள்ளனர். அந்த இளைஞர் வெளியே ஓடிவர இரண்டு பேர் மடக்கி சரமாரியாக கழுத்திலேயே வெட்டிகொன்றுவிட்டு இரண்டு இருசக்கர வாகனத்தில் எஸ்கேப்பாகினர்.

ADVERTISEMENT


இதனைப்பார்த்து அக்கம்பக்க கடைக்காரர்கள் உட்பட அனைவரும் கடையை பூட்டிவிட்டு பயத்தில் சென்றுவிட்டனர். இந்த தகவல் போலிஸாருக்கு தெரியவர திருவண்ணாமலை நகர டி.எஸ்.பி அண்ணாதுரை தலைமையிலான போலிஸ் படை சம்பவயிடத்துக்கு வந்து விசாரணை நடத்தியது. இறந்தவரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்தது.

ADVERTISEMENT


இந்நிலையில், கொல்லப்பட்டவர்கள் யார் என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் தெரியவந்துள்ளன. கொல்லப்பட்ட நாகராஜ், திருவண்ணாமலை நகரம், இராமலிங்கனார் தெருவில் குடியிருப்பது தெரியவந்துள்ளது. இவரது தாய்மாமன் திமுகவில் கீழ்மட்ட பொறுப்பில் உள்ளது தெரியவந்துள்ளது.


கொலை செய்யப்பட்ட நாகராஜ், சென்னையில் பணியாற்றும்போது, சென்னை எம்.ஜி.ஆர் நகரில் குடியிருந்துள்ளார். அங்கு வசித்த திருமணமான ஒரு பெண்ணை மயக்கி தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்துள்ளார். இதனை அப்பெண்ணின் கணவர் தட்டிக்கேட்டதால், அவரது குழந்தையை கொலை செய்து வீசியுள்ளார். அந்த வழக்கில் சிறையில் இருந்தவர் சமீபத்தில் தான் பிணையில் வெளியே வந்துள்ளார் என போலிஸாரிடம் தகவல் தெரிவித்துள்ளார் அவரது உறவினர் ஒருவர். அவரை காவல்நிலையம் அழைத்து சென்று மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


பிணையில் வெளியே வந்த நாகராஜ், சில தினங்களுக்கு முன்பு தான் பிரகாஷ் என்பவரின் கடையில் பணிக்கு சேர்ந்துள்ளார். கடைக்கு அருகிலேயே பிரகாஷ் வீடு உள்ளது. நாகராஜை கொலை செய்த விவரம் தெரிந்ததும் விவரத்தை மறைக்கும் விதமாக கொலை செய்யப்பட்டவர் யார் என்பது தங்களுக்கு தெரியாது என சாதித்தார் அங்கிருந்த முதிய பெண்மணி. அதோடு, ரத்தத்தை தண்ணீர் ஊற்றி கழுவியிருந்தனர். காவல்துறை துருவி துருவி கேட்டும் சரியாக பதில் சொல்லாததால் முதிய பெண்மணி ஒருவர் உட்பட இருவரை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்திவருகின்றனர்.


சென்னையில் நடந்த அந்த பழைய சம்பவத்துக்காக கொலை நடந்ததா ? அல்லது வேறு ஏதாவது விவகாரமா என காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்திவருகிறது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT