திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அருகே கேளுர் என்கிற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் விஜயா. 45 வயதான இந்த பெண்மணிக்கு பிள்ளைகள் உள்ளனர். கூலி வேலை செய்து வருகிறார்.

Advertisment

incident in thiruvannamalai;police investigation

ஜீலை 30ந்தேதி காலை வீட்டுக்கு அருகாமையில் உள்ள நிலம்மொன்றில் விஜயாவின் தலையில் கல்லைப்போட்டு யாரோ கொலை செய்துள்ளனர். இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் இதனைப்பார்த்துவிட்டு போலிஸாருக்கு தகவல் கூறியுள்ளனர்.

Advertisment

சந்தவாசல் போலிஸார் உடனடியாக சம்பவயிடத்துக்கு வந்தனர். காவல்துறையின் மோப்ப நாய் பெஸி-யைசம்பவயிடத்துக்கு வரவைத்தனர். அது கொலை நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் சென்று கேளுர் சாலையில் ஏறி மீண்டும் வந்துவிட்டது.

incident in thiruvannamalai;police investigation

இந்த கொலையை செய்தவர்கள் வெளியூர் நபர்களாக இருக்க முடியாது, உள்ளுர் ஆட்களாகத்தான் இருக்க வேண்டும், என்ன காரணத்துக்காக கொலை செய்யப்பட்டார், கொலை செய்தது ஒருவரா அல்லது அதற்கு மேற்பட்டவரா என போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர். கொலை செய்யப்பட்ட விஜயாவின் உடல் உடற்கூராய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர் போலிஸார். கொலை செய்யப்பட்ட விஜயாவின் உறவினர்கள், அவரது உடலைப்பார்த்துவிட்டு கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Advertisment