ADVERTISEMENT

செம்பரம்பாக்கம் ஏரியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு!

01:07 PM Dec 04, 2019 | santhoshb@nakk…

திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஏரியில் பொதுப்பணித்துறை சென்னை மண்டல தலைமை பொறியாளர் அசோகன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

ADVERTISEMENT

ஆய்வுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பொறியாளர் அசோகன், செம்பரம்பாக்கம் ஏரி 30% மட்டுமே நிரம்பியுள்ளது. மழை பெய்தால் மட்டுமே ஏரி முழுமையாக நிரம்பும் என கூறினார். செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கன அடியில் 1,103 மில்லியன் கனஅடி நீர் உள்ளது என்றார்.

ADVERTISEMENT


காஞ்சிபுரம், செங்கல்பட்டில் மாவட்டங்களில் உள்ள 909 ஏரிகளில் 550 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளது. மேலும் 133 ஏரிகள் 75%, 120 ஏரிகள் 50% நிரம்பியுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகின்றன.


இதனிடையே செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவை எட்டவுள்ளதால், கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளது மாவட்ட நிர்வாகம். மதுராந்தகம் ஏரியின் முழு கொள்ளளவான 23.3 அடியில் 22.5 அடியை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT