ADVERTISEMENT

ராம் விலாஸ் பஸ்வானிடம் திருமாவளவன் வைத்த கோரிக்கை

08:11 AM Jul 12, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானை சந்தித்து ‘One Nation One Ration’ திட்டத்தை மறுபரீசீலனை செய்யுமாறும், இடம் பெயர்ந்த மக்களின் எண்ணிக்கையை மாநிலவாரியாக கணக்கெடுப்பது தொடர்பாகவும் கோரிக்கை மனுவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவனும், விழுப்புரம் தொகுதி விசிக நாடாளுமன்ற உறுப்பினருமான
ரவிக்குமாரும் அளித்தார்கள்.

ADVERTISEMENT

அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானிம் வழங்கிய கோரிக்கை மனுவில், “‘One nation One ration card’ திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தவுள்ளதாக ஊடகங்களின் வாயிலாக நான் அறிந்தேன். இடம் பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகம். 2001ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் உள்மாநிலத்துக்குள் இடம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 26.8 கோடி, இந்தியாவுக்குள் இடம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 4.1 கோடி. இது மொத்த மக்கள் தொகையில் 25% ஆகும்.

இப்படி இடம்பெயர்ந்தவர்கள் பொது விநியோகத் திட்டத்தின் (ரேசன்) மூலம் பொருட்களை வாங்குவதற்கு மிகுந்த இன்னல்களை சந்திகின்றனர். குறைந்த ஊதியத்தையே பெறும் இடம்பெயர்ந்த மக்கள் உணவுத் தானியங்களை வெளிச்சந்தையிலே வாங்கும் நிலை உள்ளது.

இது அவர்களை இரட்டிப்புச் சுமையில் தள்ளுகிறது. அதனால் இந்த ‘One Nation One Ration’ திட்டம் என்பது முற்போக்கானது. அதே நேரத்தில் இந்த திட்டம் மாநில அரசுக்கு நிதிச்சுமையை அதிகப்படுத்தும். வடஇந்தியாவிலிருந்து தென்னிந்திய மாநிலங்களான கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டுக்கு இடம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம். தமிழ்நாட்டில் Universal PDS திட்டம் நடைமுறையில் உள்ளது. அதனால் இந்த ‘One nation One ration card’ திட்டம் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும். அதனால் தான் நாங்கள் இந்த திட்டத்தை எதிர்க்கிறோம்.

இடம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கையை மாநிலவாரியாக கணக்கெடுக்கவும், அவர்களுக்கான கூடுதல் ரேசன் பொருட்களை வழங்குவதற்கும் மத்திய அரசு முன்வந்தால் மாநிலங்கள் இந்த திட்டத்தை ஏற்றுக்கொள்ளும். இந்த பரிந்துரையை கருத்தில்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT