ADVERTISEMENT

''10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டேப்லெட் வழங்குவது குறித்து ஆலோசனை'' - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!   

03:18 PM Jun 17, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை காரணமாக பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வுகள், கரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில், ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பதினோராம் வகுப்பு சேர்க்கையும் தொடங்கி நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் டேப்லெட் வழங்குவது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, ''10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் டேப்லெட் வழங்குவது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. ஊரடங்கு காரணமாக கரோனாவின் தாக்கம் படிப்படியாக தமிழகத்தில் குறைந்துவரும் நிலையில், தளர்வுகளைப் பொறுத்து பள்ளிகளைத் திறப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும். 10 மற்றும் 12ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்குத் தேர்வு நடத்துவதா இல்லையா என்பது பற்றியும் விரைவில் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும். சி.பி.எஸ்.சி எவ்வாறு மதிப்பெண் வழங்க உள்ளார்கள் என்பதையும் ஆராய்ந்து, அதன்படி பன்னிரண்டாம் வகுப்புக்கு மதிப்பெண் வழங்க ஆலோசனை நடைபெற்றுவருகிறது. தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT