Skip to main content

ரஷ்யா செல்லவுள்ள அரசு பள்ளி மாணவிகள்... பாராட்டிய அமைச்சர் மற்றும் அதிகாரிகள்!

Published on 17/07/2021 | Edited on 17/07/2021
Government school students going to Russia ... Minister and officials praised

 

வானவியல் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் ரஷ்யாவில் நடைபெறும் விண்வெளி ஆராய்ச்சி பயிற்சி மாணவியாக சேர்வதற்கான தேர்வு சமீபத்தில் நடைபெற்றது. இந்த தேர்வில் தமிழக அளவில் பலர் கலந்து கொண்டனர். அதில் 10 மாணவிகள் மட்டும் தேர்வு செய்யப்பட்டனர். அந்த பத்து மாணவிகளில் அரியலூர் மாவட்டம் திருமானூர் அரசு பள்ளியில் பிளஸ் 1 வகுப்பில் படித்து வரும் மாணவிகள் ரகசியா, வேதா ஸ்ரீ ஆகிய இரு மாணவிகளும் தேர்வு பெற்றுள்ளனர்.

 

இவர்கள் ரஷ்யாவிற்கு சென்று விண்வெளி ஆராய்ச்சியில் பயிற்சி மாணவிகளாக பயிற்சி பெற உள்ளனர். தேர்வு செய்யப்பட்ட 10 பேரில் அரியலூர் மாவட்டத்தில் மட்டும் இரண்டு மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்படி மாணவிகளின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியை பாராட்டி ஊக்கப்படுத்தி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன், மாவட்ட கல்வி அலுவலர் அம்பிகாபதி, அரசு பள்ளி தலைமையாசிரியை இன்பராணி ஆகியோர் மாணவிகளை பாராட்டி ஊக்கப்படுத்தி பரிசளித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். மிகவும் பின்தங்கிய அரியலூர் மாவட்டத்தில் இருந்து அரசுபள்ளி மாணவிகள் இருவர் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பயிற்சி மாணவிகளாக செல்வது அரியலூர் மாவட்ட மக்களை பெருதும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எனதருமை மாணவச் செல்வங்களே...” - முதல்வர் வாழ்த்து

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Chief Minister Stalin congratulates students appearing for 10th public exam

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், தனித் தேர்வர்கள், சிறைக் கைதிகள் என மொத்தம் 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.

முதல்நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்கள் தேர்வு நடைபெறவுள்ளது.  செல்போன், உள்ளிட்ட மின்னணு சாதனப் பொருட்களைத் தேர்வு அறைக்குள் கொண்டு செல்லக் கூடாது என்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முறைகேடுகளைத் தவிர்க்க மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதவுள்ள எனதருமை மாணவச் செல்வங்களே... All the best!  நீங்கள் பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளத்தான் வினாத்தாளைப் படித்துப் பார்க்க முதலில் 10 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இதனை மற்றுமொரு தேர்வாகக் கருதி நம்பிக்கையோடு எழுதி வெற்றி பெறுங்கள். பெற்றோர்களும் உங்கள் பிள்ளைகள் உரிய நேரத்தில் தேர்வு மையத்துக்குச் சென்றிடுவதை உறுதி செய்யுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு; 70 பேர் உயிரிழப்பு

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
 Indiscriminate shooting; 70 people lost their lives

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு  பொறுப்பேற்றுள்ளது. உலக அளவில் பல்வேறு நாடுகளில் இருந்து இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இசை நிகழ்ச்சி அரங்கில் எதிர்பாராதவிதமாக பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது. இந்த கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். 140க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதற்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளத்தின் வாயிலாக இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 'இந்த துயரமான நேரத்தில் ரஷ்ய கூட்டமைப்பின் அரசாங்கத்திற்கு இந்திய அரசும், இந்திய மக்களும் துணை நிற்போம்' எனத் தெரிவித்துள்ளார்.