ADVERTISEMENT

“பழங்கதை குறித்து பேசினால் எந்த பயனும் இல்லை” - அன்புமணி  

03:10 PM Jun 13, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “பொதுத்துறை நிறுவனங்கள் தனியாரிடம் சென்று விட்டால் இட ஒதுக்கீடு பின்பற்றப்படாது அது சமூக நீதிக்கே எதிரானதாக அமையும். எனவே பொதுத்துறை நிறுவனங்கள் விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும். வரும் 17ம் தேதி மேகதாது அணை விவகாரம் தொடர்பாக காவேரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்க உள்ளார்கள். ஆனால், அதை விவாதிக்க அவர்களுக்கு அதிகாரம் இல்லை. நீர்பங்கீடு குறித்து முடிவெடுக்க தான் அவருக்கு அதிகாரம் உள்ளது. எனவே இது குறித்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றம் செல்ல வேண்டும்” என்றார்.


அதன்பின் செய்தியாளர்கள் சனாதானம் குறித்த ஆளுநரின் கருத்து குறித்த கேள்விக்கு, “பழையதை குறித்து பேச வேண்டாம். நாட்டில் தற்போது மக்களுக்கு தேவை கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு போன்றவை தான் அது குறித்து தான் பேச வேண்டுமே தவிர 2000, 3000 ஆண்டுகள் பழமையானதை குறித்து பேசினால் எந்த பயனும் இல்லை” என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT