ADVERTISEMENT

மண்ணை காக்க வேறு வழியில்லை... மரத்திடம் மன்னிப்பு கேட்ட திருநங்கைகள்

11:22 PM May 17, 2018 | vasanthbalakrishnan

புதுக்கோட்டை மாவட்டம் வறட்சி மாவட்டத்தில் முதலிடத்தில் உள்ளது. அந்த வறட்சிக்கு காரணம் மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் ஏக்கரில் வளர்க்கப்படும் தைல மரக்காடுகள் தான். அதனால் அதனை அழித்துவிட்டால் எங்கள் மண்ணும் வளமாகும் என்று விவசாயிகள் பல ஆண்டுகளாக கூறிவந்தாலும் வனத்துறை வளர்த்து வரும் 54 ஆயிரம் ஏக்கர் தைல மரங்களை அழிக்காமல் ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக தைல மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகின்றனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

தைல மரங்களை அழிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு பயணத்தை தொடங்கியுள்ள ''பொறந்த ஊருக்கு புகழ தேடு இயக்கம்'' மற்றும் புதுக்கோட்டை மாவட்ட திருநங்கைகள் சங்கம் இணைந்து இன்று கறம்பக்குடி ஒன்றியத்தில் கெண்டயம்பட்டி கிராமத்தில் ஒரு தனி நபருக்கு சொந்தமான தைல மரங்காடுகளை வெட்டி அழித்துவிட்டு மாற்று மரக்கன்றுகளை நடவு செய்தனர்

மரங்களை வெட்டும் முன்னர் உங்களை வெட்டி அழிக்கிறோம். எங்கள் மண்ணை காக்க வேறு வழி தெரியவில்லை உங்களை அழிப்பதால் எங்களை மன்னித்துவிடுங்கள் என்று தைல மரங்களிடம் முதலில் மன்னிப்பு கேட்டுவிட்டு மரங்களை வெட்டி அழித்த திருநங்கைகள் அங்கேயே கும்மியடித்து விழிப்புணர்வு பாடலுடன் நிறைவு செய்தனர். இதே போல ஒவ்வொரு தனியார் தைல மரத் தோட்ட உரிமையாளர்களிடமும் பேசி தைல மரங்களை வெட்டி அழிப்போம் என்றனர் ஏற்பாட்டாளர்கள். அதன் பிறகாவத அரசாங்கம் வனத்துறை தைல மரக்காடுகளை அழிக்கட்டும் என்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT