ADVERTISEMENT

விடுதலைப் புலிகள் பாதுகாப்பில் இருக்கும் வரை கடலில் போதைப் பொருள் கடத்தல் இல்லை!

12:11 AM Aug 13, 2018 | bagathsingh

ADVERTISEMENT

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தங்கம், கஞ்சா போன்ற போதைப் பொருட்களை பிடித்து வருகிறார்கள். விமான நிலையத்திற்கு கடத்தி வரப்படும் தங்கத்திற்கும் விமான நிலைய அதிகாரிகள் சிலருக்கும் நல்லுறவு உண்டு என்பதை கண்டறிந்து சி.பி.ஐ. பிடித்துள்ள நிலையில் தற்போது கடல் வழியாக கஞ்சா கடத்தல் தொடங்கியுள்ளது.

ADVERTISEMENT


கடந்த 10ம் தேதி காலை புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் கடற்கரைக்கு இலங்கையில் இருந்து ஒரு படகில் கஞ்சா மூட்டைகள் வருவதை திருப்புண்னவாசல் கடலோர காவல் துறையினருக்கு தகவல் கிடைக்க தயாராக காத்திருந்த காவல் துறையினர் 200 கிலோ கஞ்சா மூட்டைகளை ஒரு படகில் இருந்து மீட்டனர். ஆனால் அந்த படகில் வந்த நபர் தப்பிவிட்டார். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மூட்டைகளை மணமேல்குடி கடலோர காவல் துறையிடம் திருப்புனவாசல் போலிசார் ஒப்படைத்துள்ளனர். மேலும் சிலரிடம் விசாரனை நடந்து வருகிறது.


இது குறித்து ஜெகதாப்பட்டினம் பகுதி மீனவர்கள் கூறும் போது.. கடத்தல் பொருட்களின் பிறப்பிடமாக இலங்கை உள்ளது. சர்வதேச அளவில் இலங்கை வரும் விமானங்களில் தங்கம், கஞ்சா, கெராயின் போன்ற பொருட்கள் இறக்கப்பட்டு அங்கிருந்து தமிழ்நாட்டிற்கு விமானம் மூலமும், படகுகள் மூலமும் கொண்டு வரப்படுகிறது. சமீபகாலமாக விமான நிலையத்தில் கெடுபிடி அதிகமானதால் மீண்டும் கடல் மார்க்கத்தை கடத்தல்காரர்கள் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டை, ராமநாதபுரம் கடல் பகுதிக்கு நவீன படகுகள் மூலம் கடத்தில் வரப்பட்டு மோட்டார் சைக்கிள், கார்கள் மூலம் வெளியே எடுத்துச் செல்லப்பட்ட சுமார் 120 கிலோ தங்கம் 3 மாதத்தில் பிடிபட்டது. ஆனால் அந்த தங்கத்திற்கான உரிமையாளர் யார் என்பது இதுவரை கைது செய்யப்படவில்லை. அதன் பிறகு கடலோர கடத்தல்கள் சற்று குறைந்தது.


இப்போது மீண்டும் கடலோர கடத்தல் தொடங்கி இருக்கிறது. இதனால் இனி நம்ம மீனவர்களுக்கு தொல்லைகள் தொடங்கிவிடும். ஆனால் இலங்கை கடற்பகுதி விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை எந்த கடத்தல்காரனும் உள்ளே நுழையமுடியவில்லை. அதே போல அந்நிய சக்திகளும் வரமுடியவில்லை. ஆனால் இப்ப கடத்தல்காரனும் வருகிறான், இலங்கை நேவி இந்திய மீனவர்களை அடிக்கிறான், சீனாக்காரன் உள்ளே வந்து போறான் இப்படி நம்ம நாட்டுக்கான பாதுகாப்பே குறைந்து வருகிறது. நடுக்கடலில் பாதுகாப்பில் இருந்த இந்திய கடற்படை கண்ணில் மண்ணை தூவிட்டு தான் கடத்தல் கஞ்சா வந்திருக்கு என்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT