Skip to main content

இலங்கைக்கு ஆள் கடத்தும் ஏஜன்ட் கைது 

Published on 29/07/2018 | Edited on 29/07/2018
man

 

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே சிங்கிளி தீவில் வேட்டைத் தடுப்பு காவலர்கள்  தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த இருவர் சிக்கினர். இது குறித்து மண்டபம்  வனச்சரகர் சதீஷூக்கு தகவல் தெரிவித்தனர். அவரது அறிவுறுத்தல் படி  வனவர்,  வனக்காவலர் மற்றும் வனக்காப்பாளர் தலைமையில் வேட்டை தடுப்பு காவலர்கள் விரைந்து சென்று பதுங்கி இருந்த இருவரையும் பிடித்து வந்து மண்டபம் வன உயிரின காப்பக  அலுவலகம் கொண்டு வந்தனர்.

 

விசாரணையில் மண்டபம் முகாம் மீனவர் குடியிருப்பு நாகசாமி மகன் சிவக்குமார் 45, குஞ்சார் வலசையை சேர்ந்த நல்லாந்துரை மகன் பாஸ்கரன் வயது 40,( இலங்கையை சேர்ந்தவர் ) என்பது தெரியவந்தது.  இவர்கள் அகதிகளை மர்மப்படகு மூலம்  இலங்கைக்கு கடத்தும் ஏஜன்ட்கள் எனவும் தெரிந்தது. இதையடுத்து இருவரும் மண்டபம் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

நாகை மீனவர்கள் மீது தாக்குதல்... இலங்கை மீனவர்கள் 10 பேர் மீது வழக்கு!

Published on 26/09/2021 | Edited on 26/09/2021

 

10 Sri Lankan fishermen sued!

 

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ஆற்காட்டுத்துறை மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இலங்கை மீனவர்கள் அரிவாள், கட்டைகளால் தாக்கியதில் தமிழ்நாடு மீனவர்கள் சின்னதம்பி, அவரது மகன்கள் சிவா, சிவகுமார் ஆகியோர் காயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த 3 மீனவர்களும் மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மீனவர்களுக்கு ஆட்சியர் அருண் தம்புராஜ் நேரில் ஆறுதல் கூறி, உரியச் சிகிச்சை தர மருத்துவர்களை அறிவுறுத்தினார். தொடரும் இலங்கை மீனவர்கள் தாக்குதலைக் கண்டித்து ஆற்காட்டுத்துறை மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை மீனவர்களின் தாக்குதலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த வேலைநிறுத்தம் நேற்று நடைபெற்றது. இரண்டாவது நாளாக இன்றும் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த தாக்குதல் சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த சம்பவத்தில் மீனவர்களைத் தாக்கி 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 400 கிலோ வலை உள்ளிட்ட பொருட்களை இலங்கை மீனவர்கள் திருடிச் சென்றதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் மீனவர்களைத் தாக்கி கொள்ளையடித்த இலங்கையைச் சேர்ந்த 10 மீனவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 

 

 

 

Next Story

'என் நண்பர் ராஜபக்சேவுடன் உரையாற்றியதில் பெருமகிழ்ச்சி' - தமிழில் பிரதமர் மோடி ட்விட்!

Published on 26/09/2020 | Edited on 26/09/2020

 

Delighted to address my friend Rajapaksa - Modi tweet in Tamil!

 

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சேவுடன் இந்தியப் பிரதமர் மோடி இன்று காணொளிக்காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார் .

இந்தியா - இலங்கை இடையேயான உச்சி மாநாடு இன்று காணொளிக்காட்சி வாயிலாக நடைபெற்றது. இதில் இருநாடுகளுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்துவது தொடர்பாக, இருநாட்டு பிரதமர்களும் ஆலோசனை மேற்கொண்டனர். இலங்கை பிரதமராக ராஜபக்சே மீண்டும் பொறுப்பேற்ற பிறகு, பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்துவது இதுதான் முதல் முறையாகும். 

இந்நிலையில், 'என் நண்பர் ராஜபக்சேவுடன் உரையாற்றியதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அபிவிருத்தி, பொருளாதார உறவு, கல்வி, கலாச்சாரம் குறித்த விஷயங்கள் குறித்து பேசினோம். பல்லாயிரம் ஆண்டுகளாக புத்தபெருமான் போதனைகள் எமது மக்களுக்கு வழிகாட்டுகின்றன. பயங்கரவாதம், போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக எமது உறவு மேலும் வலுப்படும்'' என தமிழில் பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.