ADVERTISEMENT

ரூபாய் 1 கோடி மதிப்பீட்டில் கண்மாய்களை சீரமைக்கும் பணியை தொடங்கி வைத்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்!

03:10 PM Aug 09, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

தேனி மாவட்ட அதிமுக மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்புடன் பெரியகுளம் வட்டத்துக்கு உட்பட்ட கெங்குவார்பட்டி மருத்துவர் குளம் கண்மாய், மேலமங்கலம், நெடுங்குளம் கண்மாய் ஆகிய கண்மாய்களைச் சீரமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பல்லவி பல்தேவ் முன்னிலையில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

ADVERTISEMENT

தமிழக அரசு மக்களின் வளர்ச்சியை எதிர்கொள்ளவும், நீர்வள ஆதாரங்களை மேலாண்மை செய்திடவும் விவசாயிகளின் பங்களிப்புடன் நீர்நிலைகளை புனரமைக்கும் பணியான குடிமராமத்து திட்டத்தினை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது அதனடிப்படையில் மாவட்டத்தில் உள்ள குளங்களில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் வரத்து வாய்க்கால் மற்றும் கால்வாய்கள், ஏரிகள், மதகுகள் மற்றும் பிற நீர் நிலைகள் ஆகியவற்றை புனரமைத்தல், பலப்படுத்துதல் மற்றும் கழிவுகளை மறு கட்டுமானம் செய்தல் நீர் வழிகளில் அடைத்திருக்கும் செடிகளை அகற்றுதல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது தவிர அதிமுக சார்பில் தன்னார்வலர்களின் பங்களிப்புடன் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள குளங்கள் மற்றும் கண்மாய்கள் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் துணை முதல்வர் வழிகாட்டுதலின் படி தன்னார்வலர்களின் சார்பில் தேனி மாவட்டத்தில் 2020- 21 ஆம் ஆண்டு நிதியாண்டில் மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளில் குளங்கள் மற்றும் கண்மாய்கள் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, தேனி மாவட்டத்தில் மஞ்சளாறு வடிநில கோட்டத்திற்குட்பட்ட கெங்குவார்பட்டி, மேலமங்கலம் நெடுங்குளம், பொட்டலம், வண்ணான் குளம், லட்சியம்பட்டி குளம், ஆகிய கண்மாய்கள் பெரியாறு வைகை வடிநில கோட்டத்திற்குட்பட்ட வெங்கடாசலபுரம் பாதை கவுண்டன் குளம் கண்மாய், சிலமலை குளம் கண்மாய், சோழபுரம் கண்மாய், டீ புதுக்கோட்டை கட்டபொம்மன் குளம் கண்மாய், பல்லவராயன்பட்டி தாதன் குளம் கண்மாய், கோகிலாபுரம் தாமரை குளம் கண்மாய், அனுமந்தன்பட்டி வள்ளியம்மன் குளம் கண்மாய், தொப்பம்பட்டி கண்மாய், வரதராஜபுரம் அதிகாரிக்குளம் கண்மாய், தங்கம்மாள்புரம் கோவில் பாறை என மொத்தம் 12 கண்மாய்கள் சுமார் ஒரு கோடி மதிப்பீட்டில் தூர்வார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக பெரியகுளம் வட்டத்துக்கு உட்பட்ட கெங்குவார்பட்டியில் உள்ள மற்ற ஆறு குளம் கண்மாய் மற்றும் மேல்மங்கலம் லட்சுமி எம்.பட்டி குளம் கண்மாய் மேற்கொள்ளப்பட்டுள்ள சீரமைப்பு பணிகளை துணை முதல்வர் தொடங்கி வைத்தார். இதில் கெங்குவார்பட்டி மருத்துவர் குளம் கண்மாய் கரை ஆயிரத்து 330 மீட்டர் நீளத்திலும் 99.9 ஏக்கர் நீர்ப்பிடிப்பு பரப்பளவும் 17 புள்ளி 13 மி. கனஅடி கொள்ளளவு கொண்டது.

இதேபோன்று மேல்மங்கலம், நெடுங்குளம் கண்மாய் கரை ஆயிரத்து 920 மீட்டர் நீளத்திலும் 1467 புள்ளி முப்பத்தி ஒரு ஏக்கர் நீர்ப்பிடிப்பு பரப்பளவும் 2.82 கனஅடி கொள்ளளவு கொண்டது. மேலும் கண்மாய்களில் உள்ள செடிகளை அகற்றி தூர்வாரி கரைகளைப் பலப்படுத்தும் பணி மனையில் சட்டர் மற்றும் ஒழுங்கு பராமரிப்பு பணி சிமெண்டு எல்லைக் கற்கள் அமைத்து அளவீடு செய்யும் பணி ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி தண்ணீர் முழு கொள்ளளவை தேட வழி வகை செய்யும் பணி ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டது என்பது பற்றி மருத்துவர் குளம் கண்மாய் மூலம் பாசன வசதி மற்றும் 18.6 பட்டர் ரெட்ட நிலங்களும் மேல்மங்கலம், நெடுங்குளம் கண்மாயின் மூலம் வரகா நதி அணைக்கட்டு வாய்க்கால் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று அதன் மூலம் விவசாயிகள் பயன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து மேற்கண்ட பல்வேறு பகுதிகளில் குளங்கள் மற்றும் கண்மாய்கள் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின்போது தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் மற்றும் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் அன்பர் பணி செய்யும் திருப்பணி குழு தலைவர் ஜெயபிரதீப், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, பெரியகுளம் சார்பதிவாளர் சினேகா, பொதுப்பணித்துறை மஞ்சள் அறுவடைகள், வடிநில கோட்ட பொறியாளர் கார்த்திகேயன், பெரிய குளம் வட்டாட்சியர் ரத்னமாலா, அரசு ஒப்பந்ததாரர் பாண்டியராஜன் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT