தேனியில் திருமணமாகி 5 நாட்களே ஆன நிலையில் மணப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் சுவாமி விவேகானந்தர் தெருவைச் சேர்ந்தவர் சேதுபதி 22, இவருக்கும் குரங்குமாயன் தெருவை சேர்ந்த மணிகண்டன் என்பவருடைய மகளான சிவசக்தி 18, ஆகிய இருவருக்கும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு கடந்த 5 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணமாகி மறுவீட்டு அழைப்பு முடிந்து சேதுபதி தனது மனைவியுடன் தனது வீட்டின் மொட்டை மாடியில் உள்ள அறையில் வசித்து வந்துள்ளார்.கணவன், மனைவிக்குள் எந்த ஒரு கருத்து வேறுபாடும் இல்லாமல், இருவரும் சந்தோஷமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/500_19.jpg)
இந்நிலையில் சேதுபதி தனிப்பட்ட காரணித்திற்காக வெளியே சென்றுள்ளார். அப்போது சிவசக்தி வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். இதையடுத்து நீண்ட நேரமாகியும் தனது மருமகள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்து வந்துள்ளதால் மாமியார் புஷ்பவள்ளிக்கு சந்தேகம் எழுந்துள்ளது.இதனால் மாடியில் உள்ள தனது மகனின் அறைக்கு சென்று பார்த்தபோது கதவு உள்ளே பூட்டப்பட்டிருந்தது.உடனே அதிர்ச்சியடைந்த புஷ்பவள்ளி நீண்ட நேரம் கதவை தட்டியுள்ளார் கதவு திறக்கப்படாத நிலையில் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது மின்விசிறி அமைப்பதற்காக பொருத்தப்பட்டு இருந்த கம்பியில் தனது மருமகள் சுடிதார் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்தைப் பார்த்த உடனே அதிர்ந்துள்ளார். இதனையடுத்து புஷ்பவள்ளி சத்தம் போட்டுள்ளார். புஷ்பவள்ளி சத்தம் போடுவதை பார்த்து அருகில் இருந்தவர்கள் வந்துள்ளனர். அப்போது சிவசக்தி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை பார்த்து ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்துள்ளனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
பின்பு சிவசக்தி உடலை ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிவசக்தி இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தற்கொலைக்கான காரணங்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏதேனும் இருந்திருக்குமோ என்ற நோக்கத்தில் காவல்துறையினர் விசாரணையை அவரது கணவர் சேதுபதியிடம் இருந்து தொடங்கியுள்ளனர். மேலும் சிவசக்தி திருமணத்திற்கு முன்னர் வேறு யாரையோ விரும்பியிருக்கலாம் என்ற நோக்கத்தோடும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் முடிந்த 5 நாளில் இளம்பெண் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)