ADVERTISEMENT

இந்தியா சார்பில் விண்வெளி செல்ல வேண்டும்! தேனி வீராங்கனையின் லட்சியம்!!

08:23 AM Sep 06, 2019 | Anonymous (not verified)



போலந்து நாட்டில் இரண்டு மாதம் தங்கி விண்வெளி சிறப்பு பயிற்சி முடித்து சான்றிதழுடன் தேனி திரும்பிய வீராங்கனை உதய கீர்த்திகாவோ இந்தியா சார்பில் விண்வெளி செல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் இருந்து வருகிறார்.

ADVERTISEMENT


துணை முதல்வர் ஓபிஎஸ்சின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தில் உள்ள தேனி அல்லிநகரத்தில் வசித்து வரும் சமூக ஆர்வலரும் எழுத்தாளருமான தாமோதரன் அமுதா தம்பதியின் மகளான உதயகீர்த்திகா தேனியில் உள்ள பிரசன்டேஷன் கான்வென்ட் பெண்கள் பள்ளியில் தமிழ் வழியில் பிளஸ் டூ வரை படித்தார்.

ADVERTISEMENT


அதன்பின் உக்ரைன் தேசிய இராணுவ விண்வெளி ஆராய்ச்சி பல்கலைகழகத்தில் ஏர் கிராப்ட் மெயிட்டனென்ஸ் படிப்பை முடித்து கடந்த ஜனவரியில் இறுதியில் இந்தியா திரும்பினார். அதன் பின் மீண்டும் ஜூலை முதல் வாரத்தில் விண்வெளி வீரர்களுக்கான சிறப்பு பயிற்சி பெற போலந்து நாட்டுக்கு சென்றார். அங்குள்ள அனலாக் விண்வெளி மையத்தில் இரண்டு மாதங்களாக பயிற்சி பெற்றவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேனி திரும்பினார்.



இது பற்றி வின்வெளி வீரர்களுக்கான சிறப்பு பயிற்சி பெற போலந்து நாட்டுக்கு சென்று திரும்பிய
வீராங்கனை உதயகீர்த்திகாவிடம் கேட்டபோது....குழந்தைகளாக இருக்கும் போது பெற்றோர்கள் நிலாவை பார்த்து பிள்ளைகளுக்கு சாப்பாடு ஊட்டுவார்கள். அதுபோல்தான் நான் மூன்று வயது குழந்தையாக இருக்கும் போது என் அப்பா அம்மா நிலாவை பார்த்து சாப்பாடு ஊட்டும் போது நான் நிலாவுக்கு போக வேண்டுமென்று அடம்பிடித்து இருக்கிறேன். அப்பொழுது என் அப்பா அதற்கு ராக்கெட்டில் தான் போக முடியும் சாப்பிடுமா என்று கூறியும் கூட, தொடர்ந்து நான் அடம்பிடிப்பது கண்டு ராக்கெட் டிரைவர் லீவு போட்டு இருக்கிறார். வந்த பிறகு ராக்கெட்டில் போய் நிலாவைப் பார்க்கலாம் என்று கூறியே சாப்பாடு விட்டிருக்கிறார். அதிலிருந்து எனக்கு ராக்கெட்டில் போய் நிலாவை பார்க்க வேண்டும் என்று ஆசை வந்தது. அதன் எதிரொலியாகத் தான் எட்டாம் வகுப்பு படிக்கும்போதே விண்வெளி சம்பந்தமான புத்தகங்களையும் படிக்கத் தொடங்கினேன்.

எனது ஆர்வத்தை கண்டு எனது அப்பாவும் மதுரையில் உள்ள தான அறக் கட்டளையில் வேலை பார்த்து வந்ததால் அடிக்கடி எனக்கு விண்வெளி சம்பந்தப்பட்ட புத்தகங்களை வாங்கி கொடுப்பார். இந்த நிலையில்தான் நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது திருநெல்வேலியில் உள்ள மகேந்திரகிரி விண்வெளி ஆய்வு மையம் மூலம் இஸ்ரோ ஒரு கட்டுரைப் போட்டி நடத்தியது. அதாவது "பூமியை பாதுகாப்பதில் விண்வெளி ஆய்வில் பங்கு" என்ற தலைப்பில் கொடுத்திருந்தனர் .

அந்தக் கட்டுரைப் போட்டிக்கு இரவு பகல் பாராமல் படித்து படங்கள் மற்றும் நீர்நிலை காடுகளை பற்றி கட்டுரைகளை எழுதி அனுப்பி இருந்தேன் . அடுத்த சில நாட்களிலேயே இஸ்ரோவிலிருந்து எங்களுக்கு போன் வந்தது. நான் கலந்து கொண்ட கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்றதாக அறிவித்தனர். அதுவும் மாநில அளவில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டதில் எனக்கு முதல் பரிசு கிடைத்ததை கண்டு ரொம்ப சந்தோஷப்பட்டேன். அதுபோல் என் அப்பா அம்மாவும் (தாமோதரன், அமுதா) மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். அதன்பின் இஸ்ரோவில் நான் பரிசு வாங்க சென்றபோது அங்குள்ள சில விஞ்ஞானிகளும் என்னை பாராட்டினார்கள். அதைத் தொடர்ந்து மாநில அளவில் பல பரிசுகளை பெற்றேன் அதன்பின் 2014 பிளஸ் டூ படிப்பை முடித்தபோது "வழிநடத்தும் விண்வெளி என்ற தலைப்பில்" இஸ்ரோ மூலம் ஒரு கட்டுரை போட்டி மாநில அளவில் நடந்தது. அதுலயும் நான் கலந்துகொண்டு முதல் பரிசு பெற்றேன். அதன் பிறகு தான் "உக்ரையன் நாட்டில் ஏர்கிராப்ட் மெயிட் டென்ஸ் "படிக்க சீட் கிடைத்தது.

அந்த படிப்பு நான்கு வருட படிப்பு என்பதால் பல லட்சம் செலவாகும் என்று சொன்னார்கள். அந்த அளவிற்கு எங்களிடம் வசதியும் இல்லை. அப்படி இருந்தும் கூட எனது அப்பா ரொம்ப கஷ்டப்பட்டு முக்கிய பிரமுகர்கள் மற்றும் எங்க எம்.பி. அண்ணன் ரவீந்திர நாத்குமார் மற்றும் லயன்ஸ் ரோட்டரி தேனியில் உள்ள சின்ன அறக்கட்டளை மற்றும் மின்வாரிய ஊழியர் சங்கங்கள் இப்படி பலர் உதவி செய்ததின் பேரில் தான் "உக்ரைன் தேசிய ராணுவ வின்வெளி ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தில்" சேர்ந்து படிப்பை முடித்து வந்தேன். அதன் பின்தான் வின்வெளி வீரர்களுக்கான சிறப்பு பயிற்சி பெற போலந்து நாட்டுக்கு சென்று அங்குள்ள "அனலாக் விண்வெளி மையத்தில்"இரண்டு மாதங்கள் பயிற்சி பெற்றேன் அந்த பயிற்சின் போது சந்திரனில் தனியாக இருந்து ஆராய்ச்சி மேற்கொள்ள வகையில் "லுரனார் மிஷின்" என்ற பயிற்சியும் அதன்பின் செவ்வாய்க்கிரகத்தில் உள்ளது போன்ற சூழலில் "மார்ச் மிஷின் "என்ற பயிற்சியும் 16 நாட்கள் நடந்தது.

அதன்பின் ராக்கெட்டில் இருந்து இறங்கிய பிறகு வேற்று கிரகங்களில் தற்காத்துக் கொள்வதற்கான சிறப்பு "துப்பாக்கி சுடும் பயிற்சி" அளிக்கப்பட்டது. அதன்பின் ஆக்சிஜனை சுவாசித்து ஆழ்கடலில் நீந்துகின்ற "ஸ்கூபா டைவிங் பயிற்சி" தரையிறங்கும் போது தேவைப்படும் பாராசூட் பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. இதில் முக்கியமாக வினாடிக்கு எட்டு கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ராக்கெட்டில் பயணிக்கிற "சென்ட்ரிக் பியூஜ்"என்ற பயிற்சியும் கவனமாக கொடுத்தனர். அதன்பின் ராக்கெட் வான்நோக்கி முன்னே செல்கையில் உடலியல் மாற்றங்கள் ஏற்படும்.

அதனை எதிர் நோக்கும் "ஹைபோ பேரிக்சேம்பர்" என்ற பயிற்சி முடித்தால் தான் விண்வெளி வீராங்கனைக்கான சான்றிதழ் வழங்கப்படும் ஏனென்றால், ""இந்த பயிற்சியில் இதயம் மூளை செயல்பாடுகள் நின்று போவதற்கும் இரண்டு செவிகளும் கேட்கும் திறனை இழப்பதற்கும் வாய்ப்புகள் அதிகம் உண்டு" அதனை யும் வெற்றிகரமாக முடித்து "விண்வெளி வீராங்கனை காண சான்றிதழ் பெற்றேன்" இப்பயிற்சிகள் போலந்தில் உள்ள பிலால். கிரிக்கெட். வாட்ஸ்ஷன். ஆல்ஸ்டின் நகரங்களில் பயிற்சிகள் கொடுக்கப்பட்டது. அதன்பிறகு தான் ஊருக்கு வந்து இருக்கிறேன். அதோடு செவ்வாய் கிரகத்துக்கு ஆட்களை அனுப்பும் ""ககன்யான்"" திட்டத்தில் என்னையும் இணைக்க விரைவில் இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் விண்ணப்பிக்க இருக்கிறேன். அதன் மூலம் இந்தியா வின்வெளி ஆய்வு மையம்மான இஸ்ரோ சார்பில் விண்வெளிக்கு செல்ல வேண்டும் என்பது தான் எனது லட்சியம் என்று கூறினார்.


ஆக இஸ்ரோ வின்வெளி ஆய்வு மையம் மூலம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் வரும் 2021ல் செயல்படுத்த இருக்கிறது. அதில் நான்கு பேர்களை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ முடிவு செய்து இருக்கிறது என்பதால் "இஸ்ரோ வின்வெளி ஆய்வு மையத்தில் உதயகீர்த்திகாவும் இடம் பெற்று அதன் மூலம் விண்வெளிக்கு செல்ல வேண்டும்"என வாழ்த்துவோம்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT