தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று போடி சங்கராபுரம் பகுதியில் சிப்காட் அமைப்பதற்கு நிலம் சம்பந்தமாக ஆய்வுகள் மேற்கொண்டார் பின்னர் தேனி சுற்றுலா மாளிகையில் பத்திரிகையாளரிடம் பேசிய ஒபிஎஸ்...
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பொருளாதார மண்டலம் அமைக்க வேண்டும் என முன்னாள்முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் அதற்கான இடம் தேர்வு செய்து இறுதி கட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் தேனி மாவட்டம் விவசாயம் சார்ந்த மாவட்டம் அதன் அடிப்படையில் பழங்கள், காய்கறிகள் விலை ஏற்றத்திற்கு பின்பு விற்பதற்கு உணவுப் பூங்கா 500 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும். உணவுப் பூங்கா தொடங்கப்பட்ட பின்பு தமிழகத்தில் உள்ள முதலீட்டாளர்களை அழைத்து மாநாடு நடத்தப்படும்.
மேலும் தேனி மாவட்டத்தில் விவசாயம் அதிகப்படியாக செய்வதால் தனியார் நிறுவனங்கள் முன்வந்தால் 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். போடி - மதுரை இரயில் அகலப்பாதை பணிகள் சிறுசிறு பாலங்கள் முழுமை பெற்று வருகின்றது. விரைவில் பணிகள் நிறைவுபெறும். 18 ஆம் கால்வாய் மற்றும் 58 ஆம் கால்வாய்க்கு 15 நாட்களுக்குள் தண்ணீர் திறப்பது குறித்து நிலையான அரசாணைவெளியிடப்படும்.
டெங்கு நோயால் இறப்பவர்கள் முறையாக மருத்துவரை அணுகாமல் மருந்தகத்தில் மாத்திரை சாப்பிட்டவர்களே, சுகாதாரத்துறை உள்ளாட்சித்துறை, ஊரக வளர்ச்சித்துறை கூட்டு முயற்சியினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தேனி மாவட்டத்தை பொறுத்தவரை கேரளா மற்றும் தமிழகத்தை இணைக்கும் பாதைகளில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. முல்லை பெரியாறு அணை பலமாக இருக்கிறது என்று தொழில்நுட்ப வல்லுநர்கள்குழு கூறியபின்பு அணையின் நீரமட்டம் 142 அடியாக உயர்த்தப்பட்டது. பேபிஅணையை பலப்படுத்திய பின்பு 152 அடியாக உயர்த்தலாம் என்று தீர்ப்பு வழங்கியது. ஆனால்அரசு பேபி அணையை பலப்படுத்துவதற்கு 7 கோடி நிதி ஒதுக்கியும் கேரள அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது என்று கூறினார்.
இந்த பேட்டியின் போது கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் மற்றும் மாவட்ட செயலாளர் சையது கான் உடன் இருந்தனர்.