ADVERTISEMENT

நின்றுபோன திருவிழா எட்டு ஆண்டுகளுக்கு பிறகு நடந்ததால் மக்கள் மகிழ்ச்சி

09:20 AM Jun 26, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு சாதி மதம் கடந்து ஒன்றாக கோயில் திருவிழாவை நடத்தியிருக்கின்றனர் சோழியவிளாகம் கிராமத்து மக்கள்.

ADVERTISEMENT

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா திருப்பனந்தாள் ஒன்றியத்தின் கடைக்கோடி கிராமம் சோழியவிளாகம். அங்கு பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அந்த கோயிலில் அனைத்து சமூக மக்களுக்கும் வழிபட்டுவந்தனர். அதோடு பல்வேறு மாவட்டங்களிலும், மாநிலங்களிலும் இக்கோயிலின் குளதெய்வக்காரர்கள் இருக்கின்றனர். தினசரி பக்தர்கள் வந்தவன்னமாகவே இருப்பார்கள்.

இந்த நிலையில் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கோயில் புனரமைப்பு செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அப்போது நடந்த சாமி வீதிவுலாவில் தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருப்புகளுக்கு சாமி வீதி உலா வராது என சிலர் பிரச்சனை செய்தனர். அப்போது இருந்த திருவிடைமருதூர் தாசில்தார் காமராஜ் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி வழக்கம் போல் அனைத்து சமூகத்தவர் குடியிருப்பு பகுதிகளுக்கும் அம்மன் ஊர்வலம் போய்வர வேண்டும் என பேசி முடிக்கப்பட்டது. ஆனால் தாழ்த்தப்பட்ட சமூகத்தவர்களை தவிர மற்ற சமுகத்தில் உள்ள சிலர் பிடிவாதமாக மறுத்தனர். இதனால் எட்டு ஆண்டுகள் திருவிழா நடக்காமல் பூட்டியே கிடந்தது.

இந்த நிலையில் சோழியவிளாகத்தில் உள்ள பலதரப்பட்ட சமுத்தினைச்சேரந்த வெங்கடேஷ் அய்யர், ஜீ.ஆர்.எஸ்,முரளி, நக்கீரன்செல்வகுமார், ரவி, செந்தில் டி,என்,இ,பி,பாலமுருகன், உள்ளிட்ட ஊர் முக்கியஸ்தர்கள் ஒன்றுகூடி சுமுகமாக பேசி சோழியவிளாகத்தின் நலன் கருதி அனைத்து சமூக மக்களின் குடியிருப்பு பகுதிகளுக்கும் சுவாமி ஊர்வலம் கொண்டு செல்வது என முடிவெடுத்து திருவிழாவை மிக விமர்சையாக நடத்தி முடித்துள்ளனர்.

நீண்ட ஆண்டுகளுக்குப்பிறகு அனைத்து சமுக மக்களும் ஒன்றுகூடி திருவிழா நடத்தியிருப்பது அப்பகுதியில் பெருமையாக பேசப்பட்டுவருகிறது.

இதுகுறித்து ஜீ,ஆர்,எஸ், முரளி கூறுகையில், " சோழியவிளாகம் மற்ற கிரகங்களை விடமாறுபட்ட கிராமம். இங்கு சாதி மதம் எதுவும் இல்லாமல் பல ஆண்டுகளாக ஒரு தாய் பிள்ளைகளைப் போல வாழ்ந்துவந்தோம். ஒற்றுமையாக இருந்து வந்தோம். 8 ஆண்டுக்கு முன்பு ஒரு சிலரால் அசம்பாவிதம் நடந்துவிட்டது. அதை மறந்து, முறியடித்து, மீண்டும் கிராமத்தை ஒன்றாக்கி திருவிழாவை நடத்தி இருக்கிறோம். திருவிழாவில் அனைத்து சமூக மக்களும் சாமி தரிசனம் செய்து கொண்டதோடு, அனைத்து சமுகத்தவர் குடியிருப்புகளுக்கும் ஊர்வலம் சென்றது. சாமி ஊர்வலத்தை மிக அருமையாக ஒற்றுமையாக நடத்தி முடித்திருக்கிறோம். எந்த அசம்பாவிதமும் நடக்காமல் குழுவாக செயல்பட்டு முடித்துள்ளோம். இனி தொடர்ந்து திருவிழா நடக்கும். வரும் ஆண்டுகளில் முன்பு நடந்ததைப்போல தீமிதி திருவிழாவும் நடக்கும்." என்றார் பெருமையாக.

தீண்டாமை ஒழிப்பு முன்னனியின் சின்னைப்பாண்டியனோ, " தமிழகத்தில் சாதிய ஆதிக்க சிந்தனையை கூர் தீட்டி விடும் வேளையில் 8 ஆண்டுகளாக நின்று போன திருவிழாவை கிராம முக்கியஸ்தர்களே சாதிகளை கடந்து ஒன்றினைந்து அனைத்து சமூக மக்களிடத்தில் பேசி தலித் தெரு உள்ளிட்ட அனைத்து தெருவிற்கும் சாமி வீதியுலாவை கொண்டு சென்று மிக சிறப்பாக திருவிழாவை நடத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களின் ஒற்றுமைக்கு மக்களே எடுத்த நல்ல முயற்சியின் உதாரணம். புதிய நம்பிக்கையின் ஒளிக்கீற்று. அனைத்துப் பகுதி மக்களுக்கும் நல்வாழ்த்துக்கள். அந்த கிராமத்தை அனைவரும் பின்பற்றினால் நாட்டில் பிரச்சினைகளுக்கே வேலையிருக்காது." என்கிறார்.

பல கிராமங்களில் கோயில்கள் சாதியால் பிரிக்கப்பட்டுக்கிடக்கிறது. கோயில் திருவிழாவில் சாதிய மோதலால் உயிர் இழப்புகள் கூட நடந்துள்ளது, ஆனால் எந்த இழப்பும் நடக்காமல் அரசு இயந்திரங்கள் செயல்படாமல் அனைத்து சமுக மக்களும் ஒன்றுகூட இனி சாதிம தப்பாகுபடுகளே நமது கிராமத்தில் இருக்ககூடாது என முடிவெடுத்து திருவிழாவை நடத்தி அசத்தியுள்ளனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT