ADVERTISEMENT

ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு புத்தாடை - தீபாவளி பரிசு வழங்கிய திமுக எம்.எல்.ஏ

03:52 PM Nov 08, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

ராஜபாளையத்தை சேர்ந்த எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் கடந்த 85 மாதங்களாக, தான் பெற்றுவரும் எம்.எல்.ஏ. ஊதியத்தை எளிய மக்களுக்காகச் செலவழிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். தற்போது, மூன்று மாதங்களுக்கான தனது எம்.எல்.ஏ. ஊதியம் ரூ.3,15,000-லிருந்து, பொன்னகரம் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம், மருதுநகர் Light of Life குழந்தைகள் காப்பகம் மற்றும் சேத்தூர் அருளோதயம் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் ஆகிய 3 காப்பகங்களில் உள்ள 231 ஆதரவற்ற குழந்தைகளுக்கு தீபாவளி புத்தாடைகள் வாங்கிக் கொடுத்துள்ளார்.

கடந்த 6 வருடங்களைப் போலவே, இந்த 7-வது ஆண்டிலும் அக்குழந்தைகளை ஜவுளிக்கடைக்கு அழைத்துவந்து, அவர்களுக்குப் பிடித்தமான புத்தாடையை அவர்களையே தேர்வு செய்ய வைத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார். அவர்களிடம் “நீங்கள் ஆதரவற்ற குழந்தைகளல்ல; அனைவரது ஆதரவையும் பெற்ற குழந்தைகள். தீபாவளி நாளில் உங்களது ஆசிரமங்களுக்கு நேரில் வந்து உங்களுடன் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவேன்.’ என்று உறுதியளித்து அனுப்பிவைத்தார்.

மேலும் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. ஏற்பாட்டில், கொரோனா காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய முன்களப் பணியாளர்களான தூய்மைப் பணியாளர்களை கவுரவப்படுத்தும் விதத்தில், தொடர்ந்து 5-வது முறையாக, ராஜபாளையம் ஒன்றிய, நகர, பேரூர் பகுதிகளைச் சேர்ந்த 1006 தூய்மைப் பணியாளர்களுக்கு, பெண்களுக்கு சேலை மற்றும் இனிப்புகளையும், ஆண்களுக்கு வேட்டி, சட்டை மற்றும் இனிப்புகளையும் தனுஷ் M.குமார் எம்.பி.யும், தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ.வும் வழங்கியிருக்கின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT