DMK district secretaries meeting started

Advertisment

திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வருகின்ற 2024 நாடாளுமன்றத்தேர்தலில் என்னென்ன இடங்களில் கூடுதல் உழைப்பு இருக்க வேண்டும், வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை, பலம் வாய்ந்த தொகுதிகள் எவை,கூட்டணி கட்சிகளுக்கு எந்தத்தொகுதியைக் கொடுக்கலாம் என்பனகுறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அண்மையில் திமுகவின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றுமுடிந்திருந்த நிலையில், பொதுக்குழுவுக்குப் பிறகு முதன்முறையாக கூடும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.