ADVERTISEMENT

தமிழகத்தின் 33வது மாவட்டம் ’தென்காசி’உதயம்

04:14 PM Nov 22, 2019 | Anonymous (not verified)



தமிழகத்தின் 33வது புதிய மாவட்டமாக ‘தென்காசி’இன்று உதயமானது. புதிய மாவட்டத்தையும் நிர்வாக பணிகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

ADVERTISEMENT


திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து பிரிந்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. தென்காசி, சங்கரன்கோவில் ஆகிய இரு வருவாய் கோட்டங்களுடன், தென்காசி, சங்கரன்கோவில், சிவகிரி, ஆலங்குளம், திருவேங்கடம், கடையநல்லூர், செங்கோட்டை, வி.கே.புதூர் ஆகிய 8 தாலுகாக்களுடன் இந்த மாவட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

ADVERTISEMENT

இந்த புதிய மாவட்டத்தின் துவக்க விழா இன்று காலை தென்காசியில் நடைபெற்றது. துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். முதல்வர் பழனிசாமி, புதிய மாவட்டத்தையும், அதன் நிர்வாகப் பணிகளையும் துவக்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். இதன்மூலம் தமிழகத்தின் 33வது மாவட்டமாக தென்காசி மாவட்டம் உதயமாகி உள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT