Tragedy in a family dispute; Shock in tenkasi

Advertisment

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள ஆத்துவழி பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்தவர் முருகன். 32 வயதான முருகன் அருகே உள்ள கல்குவாரியில் டிரைவராக வேலை பார்க்கிறார். முருகன் கடந்த 7 ஆண்டுகள் முன்பு மீனா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு 6 மற்றும் 2 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே நேற்றிரவு கடும் வாக்குவாதம் எழுந்ததாகக் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து முருகன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். சிறிது நேரம் கழித்து முருகன் வீட்டிற்கு வந்து பார்த்தபொழுது மீனாவையும் அவரது குழந்தைகளையும் காணவில்லை.

இதனைத்தொடர்ந்து முருகன் அக்கம் பக்கத்தில் உள்ள உறவினர் வீடுகளில் தேடியுள்ளார். நெடுநேரமாகியும் மீனா வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த முருகன் கிணற்றருகே பார்த்தபோது கிணற்றினுள் அவரது மூத்த மகள் சடலமாக மிதந்துள்ளார்.

Advertisment

இந்நிலையில்,முருகன் காவல்துறைக்கும் தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் மூத்த மகளின் சடலத்தை மீட்டனர். மேலும்கிணற்றினுள் தேடியபோது அவரதுமனைவி மீனாவும்இளைய மகளும் கிணற்றினுள் இருந்து பிணமாக மீட்கப்பட்டனர்.

குடும்பத் தகராற்றில் தாயே தனது இரு குழந்தைகளை கிணற்றில் வீசி தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.