ADVERTISEMENT

கோயில் திருவிழா: ஒயிலாட்டம் ஆடிய துணை மேயர்.. கரூரில் சுவாரஸ்யம்

12:31 PM May 10, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர் பகுதியில் ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழா நேற்று முன்தினம் தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் இருந்து அம்மனுக்கு புனிதத் தீர்த்தம் கொண்டு வருதலுடன் துவங்கியது. நேற்று காலை பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற அக்னி சட்டி மற்றும் பால்குடம் ஏந்தினர். தொடர்ந்து மாலை மாவிளக்கு போடப்பட்டது.

திருவிழாவின் இறுதி நாள் முக்கிய நிகழ்வாக இன்று கருப்பசாமி ஊர்வலம் நடைபெறுவது வழக்கம். இதில் கருப்பசாமி வேடமணிந்த நபர் காலில் சலங்கை கட்டி, கையில் வீச்சரிவாள் மாதிரியுடன் கோவிலை சுற்றி உள்ள முக்கிய வீதிகள் வழியாக ஆக்ரோசத்துடன் ஓடி வந்தார். கருப்பசாமியை சாந்தப்படுத்தும் விதமாக தப்பு செட், மேள தாள வாத்தியங்கள் முழங்க ஒயிலாட்டம் நடைபெற்றது. இதில் ஊர் பொதுமக்களுடன் கரூர் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன் கலந்து கொண்டு ஒயிலாட்டம் ஆடினார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT