அமைச்சர் செந்தில் பாலாஜி குணமடைய வேண்டி திமுகவினர் மொட்டை அடித்தும், அங்க பிரதட்சிணம் செய்தும் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுநீதிமன்றக் காவலில் உள்ளார். அதேசமயம் அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக அவர் முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிறகு நீதிமன்றத்தின் அனுமதியோடு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நலம் பூரண குணமடைய வேண்டி, கரூர் தேர் வீதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் மாநகராட்சி மண்டல தலைவரும், கரூர் மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளருமான சக்திவேல், கவுன்சிலர் பூபதி, திமுக மத்திய நகர இளைஞரணி அமைப்பாளர் பாலாஜி மற்றும் மத்திய நகர இளைஞரணி துணை அமைப்பாளர் சுபாஷ் ஆகியோர் முடி காணிக்கை செலுத்தினர். மேலும் கோவில் வளாகத்தைச் சுற்றி அங்க பிரதட்சிணம் மேற்கொண்டு மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி பிரார்த்தனையில் ஈடுபட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-06/balaji-1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-06/balaji-2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-06/balaji-3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-06/balaji-4.jpg)