Skip to main content

வரலாறு, ஒவியத்தை அழிக்கக் கூடாது! - வேட்டுவ சமூகம் கோரிக்கை!

Published on 20/11/2020 | Edited on 20/11/2020

 

dddd

 

கரூரில் சேர மன்னன் காலத்தில் உருவாக்கப்பட்ட, தொன்மையான, மிகவும் பிரசித்திப் பெற்ற ஒன்று, 'கல்யாண பசுபதீசுவரர்' கோயில். இங்குதான் ஈஸ்வரன் இரு மனைவிகளோடு காட்சியளிக்கிறார். அருள்மிகு அலங்காரவல்லி, சௌந்தரநாயகி அம்மன் உடன் கல்யாண பசுபதீசுவரர் உள்ளார். 

 

இக்கோவிலின் தலவரலாற்றுப்படி, வேட்டுவர் குலப் பெண் சௌந்தரநாயகி, இந்த அம்மனின் பக்தி வரலாற்று ஓவியப் புகைப்படங்கள், கோவில் தொடங்கிய காலத்திலிருந்து இருந்ததாகவும், தற்போது இக்கோயில் புரணமைப்புச் செய்யப்பட்டு அடுத்த மாதம் குடமுழுக்கு நடைபெறவும் உள்ளது. 

 

இந்த நிலையில், அம்மன் செளந்தரநாயகி பற்றிய ஓவியம் மற்றும் அவரை பற்றிய வரலாறுகளை இந்து சமய அறநிலையத் துறை அப்புறப்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதைக் கண்டித்தும், மீண்டும் அந்த ஓவியப் புகைப்படங்களையும் மற்றும் தலவரலாறு சம்பந்தமான அனைத்து ஓவியப் புகைப்படங்களையும், அதே இடங்களில் வைத்திட வேண்டி, கரூர் மாவட்ட ஆட்சியரிடமும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரியிடமும் அனைத்து வேட்டுவ கவுண்டர்கள் சமுதாயம் சார்பாக மாரிலத் தலைவர் முனுசாமி தலைமையில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெண் நடனக் கலைஞருக்கு பாலியல் சித்ரவதை;3 பேர் மீது வழக்கு

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
of female dancer; case against 3 people

பெண் நடனக் கலைஞரை தனி அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததோடு அரசியல் பிரமுகர்களுக்குப் பாலியல் ரீதியாக இணங்குமாறு கொடுமைப்படுத்தியதாக மூன்று பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அவருடைய தாயுடன் திருவிழாக்களில் நடனமாடும் தொழில் செய்து வந்தார். பல்வேறு குழுக்கள் இணைந்து நடனமாடி வந்த நிலையில், அண்மையில் கரூரைச் சேர்ந்த மதி என்பவருடைய நடனக் குழுவில் 22 வயதான அந்த பெண் இணைந்துள்ளார்.

பல்வேறு இடங்களில் திருவிழாக்களில் நடனமாடி வந்த நிலையில், அப்பெண்ணை பாலியல் ரீதியாக மதி வன்கொடுமை செய்துள்ளார். மேலும் அரசியல் கட்சியினர் சிலருக்கும் பாலியல் ரீதியாக இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் அவர் அதற்கு மறுத்ததால் தனி அறையில் மூன்று நாட்களாக அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பெண்ணின் தாய் மகளைப் பார்க்க வந்தபொழுது சக நடனக் கலைஞர்கள் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அப்பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அவர் அடைத்து வைக்கப்பட்டு கொடுமைப்படுத்தியது உறுதியானது. அவரை மீட்ட போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவத்தில் மதி உட்பட மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மூவரையும் தேடி வருகின்றனர்.

Next Story

திரௌபதி அம்மன் கோவில் இன்று திறப்பு; போலீசார் குவிப்பு

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Draupadi Amman temple opens today; Police build up

விழுப்புரம் திரௌபதி அம்மன் கோவில் இன்று திறக்கப்படுகிறது.

விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த திரௌபதி அம்மன் தீமிதி திருவிழாவில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் கோவிலுக்கு சீல் வைத்தது. கோவிலில் இதுவரை யாரும் அனுமதிக்கப்படவில்லை. எட்டு கட்டமாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் இரு தரப்பும் நீதிமன்றத்தை நாடி இருந்தது.

இந்நிலையில் 22 ஆம் தேதியான இன்று கோவிலைத் திறந்து பூஜை நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில், ஒரு கால பூஜை மற்றும் பூசாரியால் செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று அதிகாலை முதலே கோவிலை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்ற நிலையில், தற்போது கட்டிங் மெஷின் மூலம் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கோவிலைத் திறக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், பாதுகாப்புப் பணிக்காக அதிகப்படியான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.