Skip to main content

ஆசிரியை வீட்டில் நகைகள், பணம் கொள்ளை

Published on 13/10/2017 | Edited on 13/10/2017
ஆசிரியை வீட்டில் நகைகள், பணம் கொள்ளை

திருநெல்வேலி, தச்சநல்லூா் அருகே உள்ள ராம்நகரில் குடியிருப்பவர் தேவி 32. இவர் துாத்துக்குடி மாவட்டம், கயத்தார் அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். புதிதாக ராம்நகரில் வீடுவாங்கி குடிவந்துள்ளார். அதனால் தேவியின் தந்தை அருணாசலம் மற்றும் தாயார் சகுந்தலா உடன் வசிக்கின்றனர். தேவியின் கணவர் சுப்பிரமணியன் இரவில் வெளியே சென்றிருந்தார். இரவு 8.45 மணியளவில் கைக்குட்டை துணியால் முகமூடியணிந்த மூன்று பேர் கும்பல், கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் வீட்டிற்குள் சென்றனர். பெரியவர் அருணாசலத்தைக் கயிற்றால் கட்டிப் போட்டனர். தேவி மற்றும் அவரது தாயார் சகுந்தலாவை வீட்டின் இன்னொரு அறைக்குள் தள்ளி கதவை அடைத்தனர். 

பின்னர் அவர்கள் அணிந்திருந்த நகை மற்றும் பீரோவில் இருந்த 13 பவுன்நகை மற்றும் 70000 ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர். நெல்லை மாநகர குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். 

சார்ந்த செய்திகள்