ADVERTISEMENT

தனி மாவட்டமோ, மருத்துவக்கல்லூரியோ கேட்காத எம்.எல்.ஏ டாஸ்மாக் திறப்பது சரியா?: பொதுமக்கள் கேள்வி

05:54 PM Jan 13, 2020 | Anonymous (not verified)

"மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிப்பது குறித்தோ, மருத்துவக்கல்லூரியை அமைப்பது குறித்தோ, பாதாளச்சாக்கடை உடைந்து நகரத்தை நாசமாக்குவதை கண்டித்தோ, வாய்த்திறக்காத மயிலாடுதுறை எம்.எல்.ஏ ராதாகிருஷ்ணன், வாக்களித்தவர்களின் குடியை கெடுக்கும் டாஸ்மாக் கடையை திறப்பது வெட்கமில்லையா" என்கிற ஆவேச முழக்கத்தோடு, புதிதாக திறந்துள்ள டாஸ்மாக் கடைக்கு செல்லும் வழியை அடைத்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் நகரமக்கள்.

ADVERTISEMENT

ADVERTISEMENT



நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகரத்தில் மக்களுக்கு அச்சுறுத்தலாக இயங்கிய மதுபானக்கடைகள் அனைத்தையும் மிகப்பெரிய மக்கள் போராட்டத்திற்கு பிறகு அகற்றப்பட்டன. பிறகு அதிமுக எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன் பினாமிகள் சிலரின் பெயரில் குறைநாடு பேருந்து நிறுத்தத்தில் ஒன்றும், புதிய பேருந்து நிறுத்தத்தில் பாருடன் கூடிய டாஸ்மாக் கடையும், மகாதன தெருவில் பார் வசதியுடன் கூடிய டாஸ்மாக் கடையும் திறக்கப்பட்டது.

இதற்கிடையில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் ஸ்டேட் பேங்க் ரோட்டில் இயங்கிவந்த மதுபான கடையை மக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக போராட்டம் நடத்தி அப்புறப்படுத்தவைத்தனர். இந்தநிலையில் மீண்டும் அதே பகுதியில் ஜுவல்லரிகள், பள்ளிவாசல், பெண்கள்விடுதி, பேருந்துநிலையம் என நெரிசலான பகுதியில் கடையை பினாமிகளின் மூலம் திறக்கவைத்திருக்கிறார் எம்,எல்,ஏ ராதாகிருஷ்ணன். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதிக்கு செல்லும் சாலையை அடைத்து எதிர்ப்பை காட்டியுள்ளனர் நகர மக்கள்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT