தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ என்று சொல்லப்பட்டு வந்த ரத்தினசபாபதி எம்.எல்.ஏ இன்று முதல்வர் எடப்பாடியை சந்தித்தார். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு தினகரனுக்கு ஆதரவாக இருந்தார் என்று சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். இந்த நோட்டிசை எதிர்த்து சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சியான திமுக கொண்டு வந்தது. சட்டபேரவை கூட்ட தொடரின் போது சபாநாயகருக்கு எதிராக கொடுக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை திமுக வாபஸ் வாங்கியது.

Advertisment

mla

Advertisment

ஏற்கனவே தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ பிரபுவும் முதல்வருக்கு எதிராக செயல் பட மாட்டேன் என்று தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ ரத்தினசபாபதி எடப்பாடியை சந்தித்தது அரசியலில் பரபரப்பானது. மேலும் தினகரன் கட்சியில் இருந்து அமைப்பு செயலாளர் இசக்கி சுப்பையாவும் இன்று விலகுவதாக அறிவித்தார் என்பது குறிப்படத்தக்கது. தினகரனுக்கு அரசியலில் பெரும் பின்னடைவை இந்த நிகழ்வு ஏற்படுத்தியுள்ளது. இதனால் தினகரன் அப்செட்டில் இருப்பதாக தெரிவிக்கின்றனர் அரசியல் வட்டாரங்கள்.