கடலூர் மாவட்டம், புவனகிரி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரும், அ.தி.மு.க. கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளருமான ஆ.அருண்மொழிதேவனுக்கு செய்யப்பட்ட கரோனா மருத்துவ பரிசோதனையில் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பொங்கலுக்கு முன்பாகவே, அவரது குடும்பத்தில் மனைவி மற்றும் மூத்த மகன் என இரண்டு பேருக்கும் கரோனா நோய்த்தொற்று உறுதியான நிலையில், இவருக்கு தொற்று இல்லை என பரிசோதனை முடிவு வந்துள்ளது. எனினும், அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
இந்நிலையில், அவருக்கு இன்று (17/01/2022) மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், அவரை பார்க்க யாரும் வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.