ADVERTISEMENT

கம்யூனிஸ்ட்டுகளை காப்பாற்றிய தமிழ்நாடு

07:36 PM May 23, 2019 | kalaimohan


இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் இடதுசாரிகளான கம்யூனிஸ்ட் கட்சிகளின் பங்கு முந்தைய காலங்களில் தேவையானதாக இருந்தது. ஆனால் தற்போது இடதுசாரிகளின் பங்களிப்பு என்பது மிகவும் சுருங்கி போய் உள்ளது. அதுவும் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் வெளிவந்துள்ள முடிவுகளின்படி கம்யூனிஸ்டுகள் பெரும்பாலான மாநிலங்களில் தோல்வியை தழுவியுள்ளார்கள்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

குறிப்பாக மேற்கு வங்கம், கேரளா மற்றும் திரிபுராவில் பலமாக உள்ளார்கள் என்று கூறப்பட்ட நிலையில் அங்கு கம்யூனிஸ்டுகளுக்கு மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது. ஓரிரு இடங்களில் வெற்றி பெறுவார்களா என்பது மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் கம்யூனிஸ்டுகளின் அரசியல் அணி அமைப்பு என்பது தொடர்ந்து பல பாராளுமன்ற தேர்தல்களிலும் தோல்வியைத் தழுவியுள்ளதையே தற்போது வெளிக்காட்டியுள்ளது. ஆனால் கம்யூனிஸ்டுகளை காப்பாற்றி உள்ளார்கள் என்றால் அது தமிழ்நாடு தான். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இரு கட்சிகளுக்கும் தலா இரண்டு இடங்கள் திமுக கூட்டணியில் கொடுக்கப்பட்டது. அந்த இரண்டு இடங்களையும் இரு கட்சிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆக இந்திய அளவில் இடதுசாரிகளின் மரியாதையை காப்பாற்றிய மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT