ADVERTISEMENT

மணல் குவாரியில் சிக்கி சிறுமி உயிரிழப்பு-நாகை அவலம்!

10:16 PM Nov 29, 2020 | kalaimohan

ADVERTISEMENT

அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் நடவடிக்கை எடுக்கவேண்டிய போலீசாரும் மணல் மாஃபியாக்களிடம் கையூட்டுப் பெற்றுக்கொண்டு மறைமுகமாக மணல் கொள்ளைக்கு அனுமதிப்பதால் விளைநிலங்களையும், குளங்களைம், ஆறுகளையும் பாதாளமாக குடைந்தெடுக்கின்றனர் மணல் மாஃபியாக்கள். அப்படி தோண்டபட்ட இடங்களில் அப்பாவி குழந்தைகள் தவறிவிழுந்ரு பலியாகும் அவலம் தொடர் நிகழ்வாகிவருகிறது.

ADVERTISEMENT

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே காவிரி ஆற்றில் தொடரந்து நடந்த மணல் கொள்ளையால் குளிக்க சென்ற சிறுவர்கள் சுழலில் சிக்கி இறந்தனர். அதேபோல நாகை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் குளத்தில் தோண்டி எடுக்கப்பட்ட மணல் குழியில் சிக்கி ஒரு குழந்தை இறந்துபோனார். அந்த வகையில் மணல் குவாரியில் தேங்கியிருந்த நீரில் விழுந்து 7 வயது சிறுமி பலியாகியிருக்கிறார்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்துள்ள கிராமம் கீழகுறிச்சி. அங்கு 300-க்கும் அதிகமான ஏழை எளிய மக்கள் வசித்து வருகின்றனர். அந்த கிராமத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான ஐயனார் கோவில் திடலில் தனி நபர் ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு அனுமதியின்றி மணல் குவாரி அமைத்து மணல் எடுத்து விற்பனை செய்துவந்துள்ளார்.

அரசு விதித்துள்ள விதிமுறைகளையும் மீறி அளவுக்கு அதிகமான ஆழத்தில் மணல் எடுத்திருந்ததால் அந்த பகுதியே படுபாளமாகியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அரசு அதிகாரிகளுக்கு தொடர்ந்து தகவல் கூறிவந்துள்ளனர். ஆனால் அதிகாரிகளோ கையூட்டு பெற்றுக்கொண்டு கண்டுகொள்ளாமலேயே இருந்துவிட்டனர்.

இந்தநிலையில் நிவர் புயல் காரணமாக தண்ணீர் தேங்கி ஏரிபோல் காணப்பட்டது. அங்கு ஏற்கனவே இருந்த தண்ணீரைக் கொண்டு இறால் வளர்த்துள்ளனர். அதற்காக மிதவை ஒன்றை கொண்டுவந்து போட்டிருந்தனர். இதனை கண்ட சிறுமிகள் படகு என நினைத்து, தண்ணீரில் மிதந்த மிதவையில் ஏறி விளையாட சென்றுள்ளனர். அந்த சிறுமிகளில் ஒருவரான கீழகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரது மகளான மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமியான தமிழ்செல்வி, மணல் குவாரி தண்ணீருக்குள் விழுந்துவிட்டார்

இதனைக் கண்ட மற்ற சிறுமிகள் தமிழ்செல்வியை மீட்க முயன்றிருக்கின்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. அங்கிருந்து பதற்றத்துடன் ஓடி சென்று ஊரில் உள்ளவர்களிடம் கூறியதும். கிராம மக்கள் திரண்டு வந்து தண்ணீரில் குதித்து தேடினர். அப்போது சுமார் 10 அடி ஆழத்தில் சிறுமியின் உடல் சேற்றில் சொருகி இறந்த நிலையில் உடலை மீட்டனர்.

தமிழ்செல்வியின் உடலைக் கண்டு ஒட்டுமொத்த கிராமமும் கண்ணீர் விட்டது. மணல் குவாரியில் சிறுமி உயிரிழந்த சம்பவம் கீழக்குறிச்சி கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT