
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கடலில் மிதந்து வந்த மர்ம திரவத்தை குடித்த மீனவர்களில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாம்பன் பகுதியைச் சேர்ந்த 6 மீனவர்கள் கோடியக்கரையில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், 3 லிட்டர் மர்ம திரவம் கொண்டபாட்டில் ஒன்று மீனவர்கள் வீசிய வலையில் சிக்கியுள்ளது. அந்த பாட்டிலில் இருந்த திரவத்தை அங்கிருந்த மீனவர்களில்அந்தோணி, போஸ்,வினோத் ஆகிய மூன்று மீனவர்கள் மட்டும்குடித்துள்ளனர்.
அந்த மர்ம திரவத்தைகுடித்த சிலநொடிகளிலேயேதங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் அந்தோணி சம்பவ இடமான படகிலேயே உயிரிழந்தார். போஸ், வினோத் ஆகிய மற்ற இருவரும் மீட்கப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடலில் மிதந்து வந்த மர்ம திரவத்தை குடித்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)