ADVERTISEMENT

'தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு'- சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்!

12:48 PM Aug 23, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT


தமிழகத்தில் வெப்பச்சலனம், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சேலம், தருமபுரி, சிவகங்கை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; நகரின் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக ஏற்காடு, பாப்பிரெட்டிபட்டியில் தலா 8 செ.மீ, மேட்டூரில் 6.2 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT