ADVERTISEMENT

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நீதிமன்றங்களைத் திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி!

07:17 AM May 31, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT


தமிழகம் முழுவதும் ஒன்பது மாவட்டங்களில் நீதிமன்றங்களைத் திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

ADVERTISEMENT


கரோனா அச்சுறுத்தலை அடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் வழக்குகளை வீடியோ கான்பரன்சிங் மூலம் மட்டுமே விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது, பார் கவுன்சில், வழக்கறிஞர்கள் சங்கங்களின் கோரிக்கை மற்றும் மாவட்ட முதன்மை நீதிபதிகளின் கருத்துக்களைப் பெற்ற சென்னை உயர்நீதிமன்றம், அனைத்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதிகளும், நீதிமன்ற அறையில் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரிக்க அனுமதியளித்துள்ளது.

தர்மபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி, திருவாரூர், தேனி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், கரூர் மற்றும் சிவகங்கை ஆகிய ஒன்பது மாவட்டங்களில் நீதிமன்றங்களைத் திறக்க அனுமதியளித்த சென்னை உயர்நீதிமன்றம், ஐந்து வழக்கறிஞர்களை மட்டுமே நீதிமன்ற அறைக்குள் அனுமதிக்க வேண்டும் எனவும், வழக்கு தொடர்ந்தவர்களை அனுமதிக்கக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற அறைகளில் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு பின், இந்த நடைமுறை மறு ஆய்வு செய்யப்படும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் குமரப்பன் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT